சனி, 28 ஜூலை, 2012

கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம், ஜூலை 27: கோவில் திருவிழாவில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான விசாரணைக்குப் பின்னரே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். ÷மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, அரிஜன காலனியைச் சேர்ந்த வீராசாமி (30). தேவனாபுரத்தில் உள்ள பாலாஜி என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த இன்னிசை நிகழ்ச்சியில் வீராசாமிக்கும், பாலாஜியின் தம்பி ஈஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீராசாமியை பாலாஜியும், அவரது நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ÷படுகாயம் அடைந்த வீராசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பாலாஜி (32), சதீஷ் (20), பாலசுப்பிரமணியம் (41) ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிந்து, மேட்டுப்பாளையம் போலீஸôர் தேடி வருகின்றனர். ÷இந்தக் கொலை வழக்கில், சம்பந்தமில்லாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியும், இதுகுறித்து முறையான விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும், கொங்கு முன்னேற்றக் கழகம், கொங்கு வேளாளர் பேரவை, முத்தரையர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் 200-க்கு மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ÷கொங்கு முன்னேற்றக் கழக வடக்கு மாவட்டச் செயலர் மாணிக்கராஜ், மாநில அமைப்பாளர் நாகராஜ், நகர கொங்கு வேளாளர் பேரவைத் தலைவர் சி.பொன்னுசாமி, பாஜக நகரத் தலைவர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். ÷இதைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கை மனுவை நீலகிரி எஸ்.பி. நிஜாமுதீனிடம் வழங்கினர்.
NEWS FROM : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக