செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

"சிந்தனை சிற்பி" - மறு பதிப்பு

சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா...


ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
-திருமேனி


சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக