ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் சமுதாயம் இன்று பெருமைப் படக்கூடிய ஒரே விசயம் நம் சமுகப் பெண்களின் கல்வி அறிவு, மற்ற சமுகங்களைக் காட்டிலும், நமது சமுகத்தின் ஆண்களைக் காட்டிலும் கல்வி அறிவில் நமது பெண்கள் மிகப் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள்/ சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு சமுக, பொருளாதர காரணங்களால் ஆண்பிள்ளைகளால் சாதிக்க முடியாத விசயத்தில், பெண்களின் இந்த சாதனையை மேலும் நாம் ஊக்கப் படுத்த வேண்டும், நமது சகோதரிகளுக்கு சரியான வழிக்காட்டுதலும், தொடர்ந்து படிக்க ஊக்கமும் தர வேண்டும் அது நாளைய நமது சமுகத்தின் வெற்றிக்கு பெறும் உதவியாக இருக்கும், நான் அறிந்து பெரும்பாலான நம் சகோதரிகள் நிரம்ப படித்தும் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல், இரத்த உறவுகள் யாரும் தாம் தேர்ந்தெடுத்த துறையில் இல்லாததலும் வேலைக்கு செல்ல முடியாமல் / பணி வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருக்குக்கின்றார்கள், இவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பினை எவ்வாறு பெற்றுத்தர முடியும் ? இது குறித்த உங்களின் ஆலோசனை என்ன ? அரசு வேலை என்றால் பாதுகாப்பு பிரச்சனைகள் கிடையாத...
ு, பணி நேரமும் குறைவு ஆனால் அது நமக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. அதற்க்காக அவர்கள் கற்ற கல்வி வீணாகவும் கூடாது, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் அவர்களின் கல்வி நிலைக்கு ஏற்ப உரிய வேலை வாய்ப்பினை பெற்றுத்தர என்ன வழி ? நமது சகோதரர்கள் இவர்களுக்கு உதவ அல்லது இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பற்றி அறிவிக்க என்ன வழி ? இது நமது இனதின் ஏதிர்கால பிரச்சனை இது குறித்து நாம் விவாதிப்போமா ?

உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....



சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,

ஒருங்கிணைப்பாளர்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 
Write to : sanjai28582@gmail.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக