ஞாயிறு, 4 நவம்பர், 2012

பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பணியை விரைவுபடுத்த கோரிக்கை

 
 
                   பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல்
தடுப்பு சிறப்புப் பிரிவு தொடங்க வேண்டும். தஞ்சை- பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைத் திட்ட அளவீடு பணிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்த ரயில்வே நிலைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுக்கு நன்றி தெரிவிப்பது. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு பாசனத்துக்கு போதிய தண்ணீர் விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இளைஞரணிச் செயலர் சூரை சி. ராஜ்குமார் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொகுதிச் செயலர் மனோகரன் வரவேற்றார். நகரச் செயலர் பாலு நன்றி கூறினார்.
 
NEWS FROM : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக