பட்டுக்கோட்டை, : தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க பட்டுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட இளை ஞரணி செயலாளர் சூரைராஜ்குமார் தலைமை வகித் தார். தொகுதி செயலாளர் மனோகரன் வரவேற்றார்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் துவக்கி வைத்த சித்த மருத்துவ சிகிச்சை பிரிவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள அரசை கேட்டு கொள்வது.
தஞ்சை- பட்டுக்கோட்டை நேரடி அகலப்பாதை திட்டத்திற்கு சர்வே செய்ய நிதி ஒதுக்கீடு ஏற்பாடு செய்த ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பிக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை நகரத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலை அமைக்க மாநில அரசை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
NEWS FROM : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக