செவ்வாய், 13 நவம்பர், 2012

ஒரு மனவியல் தத்துவம்...!!!

நான் யார் ? என்ன சாதி ? என்பதனை எங்கே சொல்லலாம் எங்கே சொல்லக்கூடாது என்பதில் நமக்கு பொதுவாகவே ஒரு குழப்பம் உண்டு, சொல்லக் கூடிய இடத்தினை மூன்று வகையாக பிரிக்கலாம் ஆபத்தான இடம், சரிசமமான இடம், பாதுகாப்பான இடம்.
முதலில் ஆபத்தான இடங்களில் நம்மை வெளிக்காட்டி கொள்வதனால் நமக்கு துன்பமே மிஞ்சும்.. சில நேரங்களில் உடமைக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தாக முடிந்துவிடும், அந்த இடங்களில் வேகத்தினைவிட நமக்கு விவேகமே முக்கியம், சில நேரம் ஆபத்தினை விளைவிக்கக் கூடியவர்கள் முட்டாள்களாக இருக்கக் கூடும் அந்த இடத்திலும் நான் "முத்தரையர் " என்று கூறி ஆபத்தில் சிக்கிக் கொண்டால் நம்மை முட்டாள்கள் என்று உலகம் சொல்லும், அவ்வாறு சொல்லுவதனால் அந்த இடத்தில் எந்த நன்மையும் எற்பட போவதில்லை..!! இந்த ஆபத்தான இடம் என்பது பிற சாதி வெறியர்களின் இடமாகவே இருக்கும் அவர்களின் சாதி வெறி என்பது அவர்களிடம் இருக்கும் மனிதம் என்ற ஒன்றினை இல்லாமல் செய்திருக்கும்.. ஆபத்து என்று தெரித்தால் அந்த இடத்திலிருந்து நாம் விலகி செல்வதனால் நாம் கோழைகள் என்றோ, தைரியம் இல்லாதவர்கள் என்றோ நாம் நினைப்பது அறிவீனம், மாறாக அதனை தந்திரம் என்றே கருதவேண்டும் அந்த இடத்திலிருந்து பின்வாங்குவது நமக்கும் நம்மை சார்த்தவர்களுக்கும் நன்மையையே தரும்.
இரண்டாவதாக சரிசமமான அல்லது ஆபத்தில்லா இடங்களில் அவசியம் எற்பட்டால் நம்மை வெளிக்காட்டிக் கொள்ளலாம், உதாரணமாக பணி புரியும் இடத்திலோ, படிக்கும், பழகும் இடத்திலோ நம்மோடு பழகும் நண்பர்கள் அவர்கள் சாதியின் பெருமையினை சொல்வார்களே யானால் தயக்கம் இல்லாமல் நமது பெருமையையும் அவர்களின் நட்பிற்க்கு எந்த பங்கமும் வராத ரீதியில் வெளிப்படுத்துங்கள், அந்த பெருமை பெரும்பாலும் நமது பேரரசர் பற்றியோ, நாம் ஆண்ட பரம்பரையென்பது பற்றியோ பெருமையோடு பேசுங்கள், அதுவும் அவர்களாக பெருமை பேச தொடங்கினால் மட்டும், அந்த இடத்தில் நமது பெருமையை மட்டும் சொல்லி ஒருவேளை அவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயம் இருந்தாலும், அந்த இடத்தில் அவரும் புரிந்துக் கொள்வார், ஒரு நிலையிலும் நம்மைப் பற்றி நாமே தவறாக பேசிவிடக்கூடாது மற்றவர்களும் தவறாக பேசினால், அவர்கள் சொல்வது தவறு என்று விவாதமாக்குங்கள், பெரும்பாலும் குற்றம் சொல்பவர்களிடம் முழுமையான தகவல் இருக்காது, ஒருவேளை உங்களிடமும் தகவல் இல்லை என்றாலும், தகவல்களை திரட்டிக் கொண்டோ அல்லது இருக்கும் பொதுவான தகவல்களை கொண்டோ நாம் உயர்த்தவர்களே என்று வாதாடுங்கள் முடிவில் வெற்றி நமதாக இருக்கும் தயக்கம் இல்லாத நமது வாதமே நாம் சொல்வது சரி என்ற எண்ணதினை மற்றவர்களுக்கு எற்படுத்திவிடும், நம்முடைய வாதம் என்பது பிற எந்த சமுகத்தினையும் குறைத்து சொல்வதற்க்கு மாற்றாக நமது பெருமையினை கூறுவதாக மட்டும் இருந்தால் நம்முடைய மதிப்பு நாம் பழகும் இடங்களில் உயர்வினை தரும் இதில் மையக் கருத்து எப்போதும் , எந்த சூழ் நிலையிலும் "விட்டுக் கொடுப்பதில்லை" என்பதுதான்
அடுத்து பாதுகாப்பான இடம், பாதுகாப்பான இடங்கள் என்றால் நம் மக்கள் மட்டுமே உள்ள இடம், பிர மாநிலங்கள், நாடுகளில் இங்கெல்லாம் நாம் உணர்வு பூர்வமாக நம்முடைய பலவீனங்கள், பலங்கள் பற்றி நம்ம்முடைய நிறை, குறைகள் பற்றி விவாதிக்கவும் நம்முடைய முன்னேற்றம் பற்றி சிந்திக்கவும், ஆலோசிக்கவும் செய்ய வேண்டும் எங்கேனும் நம்மைப் பற்றிய தவறான கருத்துக்கள் சொல்லப் பட்டால் , யார் அந்த கருத்துக்களை சொன்னது ? சொன்னவரின் பிண்ணனி என்ன ? சொல்லப் படுவதின் காரணம் என்ன ? உண்மையில் அந்த குறை நம்மிடம் இருக்கிறதா ? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு களைவது ? என்பது குறித்து நம் சமுகத்த்தின் மீது அக்கறையுள்ள பெரியவர்களிடம் இருந்து அவர்களின் ஆலோசனையினை பெறலாம்
இதில் சாதி என்ற இடத்தில் மதம் என்றோ, மொழி என்றோ மாற்றினாலும் கருத்து பொருந்தும், இவ்வாறு நாம் இடம், பொருள் அறிந்து பழகினால் ஒரு நாளும் நமக்கு ஆபத்தில்லை என்பது எனது கருத்து நண்பர்கள் தங்களின் கருத்தினை அறிய விரும்புகிறேன்
என்றும் உங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக