நிறைய நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காலம் தீர்மானிக்கிறது, மற்ற நேரங்களில் நாம்என்ன செய்யலாம் என்பதை நடந்தசம்பவங்களில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். சமீபத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூசைக்கு சென்று திரும்பிய தேவர் இனத்தவர் மீதான தாக்குதலும்,கொலையும், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணத்தால் நடந்த வன்னியர் - தலித் மோதலும், நாமும் நம்முடைய நிலையினை குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு இனம் எவ்வாறு ஒன்று சேர முடியும் என்பதினை நாம் தேவர்கள் எனப்படும் முக்குலத்தோரிடம் (மறவர், அகமுடையார், கள்ளர்)கற்றுக் கொள்ள முடியும், அவர்களிடமும் ஆயிரம் சங்கங்கள் உண்டு..!! அவர்களிடமும் ஆயிரம் பிளவுகள் உண்டு..!!! ஆயினும் அவர்களால்ஒரு பொதுவான விசயங்களுக்காக ஒன்று கூடிவிட முடிகிறது. ஆதிக்க சாதியாக அறியப்படும் அவர்களைத் தான், ஒடுக்கப் பட்டவர்களாக அடையாளப் படுத்தப் படும் தேவேந்திர குல வேளாளர்கள் (பள்ளர் (அ) மள்ளர்) கொலை செய்கிறார்கள்,
எந்த சமூகமும் மற்ற சமூகங்கள் மேல் காட்டக் கூடிய ஆதிக்கம் இவ்வாறான விளைவுகளையே கொண்டு வரும், மற்றவர்களுக்கான உரிமைகளைப் பறிப்பதும், அவர்களை தமக்கு சரிசமமாக நினைக்காததும்இத்தகைய விளைவுகளையே தரும் என்பது இதிலிருந்து நாம் பெறக் கூடிய பாடம், அதற்க்காக அப்பாவிகளை கொல்வதும், பலி தீர்த்துக் கொண்டதாக சந்தோசம் கொள்வதும் தற்காலிகமான சந்தோசம் மாத்திரமே.. உங்களுக்கு எதுவெல்லாம் மறுக்கப் படுகிறதோ.. அதனை சமரசமாகப் பெறுவதே அமைதியான வாழ்விற்க்கு உதவுமே தவிர வன்முறை சில சாதித் தலைவர்களின் அரசியல் ஆதாயத்திற்க்கு மட்டுமே உதவும், இதுவும் நாம் பெறக் கூடிய பாடமாக இருக்கிறது. இதில் இரண்டு தரப்பும் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக வேண்டும் என்பது நமது விருப்பம், எந்த விழாவிற்க்கும் சில அமைப்புக்களால் செய்யப் படும் சில அதிகப்படியான ஆடம்பரங்களை குறைத்து, மற்ற இனங்களும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் ஒரு அமைதியான விழாவாக நடத்தினால் அது அந்த இனத்திற்க்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்,
யாரோ சிலரின் தூண்டுதலால் அடுத்த இனத்தினரை எதிரியாகவே காண்பது வளர்ந்துவரும் சமூகங்களுக்கு எப்போதுமே எங்கே என்ன நடக்கும் என்ற தேவையற்ற பதற்றத்தினை தரக் கூடியதாக அமைதியான வாழ்வினை தொலைத்த நிலை ஏற்படும். அமைதியான எல்லோரையும் அனுசரித்து வாழ்வது ஒன்றைதான் வேண்டுகோளாக நாம் இரு சமூகங்களுக்கும் வைக்கிறோம். ஒவ்வருவருக்கும் அவர் சார்ந்த சாதி உயர்வானதே.. இதில் நான் உயர்ந்தவன் என்பதும், நீ தாழ்ந்தவன் என்பதும் சரியான நிலை இல்லை. இந்த இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டு இருக்கும் இந்த பதற்றமான நிலையினை சில சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் பெற்று வருகின்றன, இந்த இரு சமுகங்களுக்கும் எந்த பயனும் இல்லை, மாறாக அவர்களுக்கு நட்டம் மாத்திரமே எற்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதினை தீர்மானிக்க / வாழ முழுமையான உரிமை உண்டு அது சமூகத்தை பாதிக்காதவரை... ஒரு தலித் இளைஞன், ஒரு வன்னியப் பெண்ணை விரும்பியது "காதல்" என்பதுவரை அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாகிறது, தான் வாழ்கின்ற இடத்தில், இடத்தின் சமூக அமைப்புக்களை அறித்த பின்னரும் திருமணம் என்று வரும்பொழுது, சமூக அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே தனி மனித விருப்பம் ஏற்புடையதாக இருக்கும், திராவிட இயக்கங்களால் சொல்லப் படும் சாதி மறுப்பு திருமணம் என்பது வெறும் மாயை மட்டுமே அரசியலுக்காக அவர்கள் நம் மக்களிடையே பிரச்சனைகளை உருவாக்க கையாளும் தந்திரம் மாத்திரமே... இதில் சில தலித் தலைவர்களும் தங்களின் ஆதயத்திற்க்காக இளைய தலைமுறையை கவருவதற்க்காக வேற்று சாதியில் திருமணம் செய்யுங்கள் என்று கூறி அவர்களை மூலை சலவை செய்கின்றனர், அவர்களுக்கு பாதுகாப்பு தருவதாக பொய்யான வாக்குறுதி தருகிறார்கள், அவர்கள் உண்மையில் தமது இனத்தில் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால் தனது சமூகத்தை மற்ற சமூகங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும், அதை விடுத்து அடுத்த சாதியிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்வதால் இனம் முன்னேற்றம் பெற்று விடுமா ? இது முட்டாள்தனமான வாதம் என்பதை தலித் இளைஞர்கள் உணர வேண்டும், இது அனைத்து வளரும் சமூகங்களுக்கும் பொருந்தும், சாதி மாறி அல்லது உயர்த்த சாதியில் திருமணம் செய்வதால் எந்த சமூக அந்தஸ்த்தும் பெற முடியாது, மாறாக பகையும், வன்மமும் மாத்திரமே வளரும், தன்னுடைய சுய லாபத்திற்க்காக / ஆசைக்காக தான் சார்ந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது எவ்வாறு சரியாகும் ? 500 மக்கள் வீடு இழத்து, சொத்தை இழந்ததை தவிர அந்த காதல் தம்பதி பெற்ற பலன் என்ன ? என்பதை அவர்கள் தங்களிடமே கேட்டுக் கொண்டால் அவர்களின் இந்த செயல் அர்ந்தமற்றதாக அவர்களுக்கே தோன்றும்.
இங்கே வன்னிய மக்களிடமும் கேட்க நம்மிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது, இதே பெண் ஒரு உயர்ந்த சாதியில் / உங்களுக்கு சமமான சாதியில் திருமணம் செய்திருந்தால் நீங்கள் இதே நிலையினைதான் எடுத்திருப்பீர்களா ? இது போன்ற திருமணங்கள் உங்கள் சமுகத்தில் இதற்க்கு முன்பு நடந்ததில்லையா ? தவறு செய்தது ஒரு தனி மனிதன் அவனுக்காக அவனது குடும்பம் தாண்டி மற்றவர்களின் வீட்டையும் அவர்களின் உடமைகளையும், சொத்தையும் அழிப்பது எவ்வாறு நியாயமாகும் ? இதில் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் பார்வையில் தாழ்த்தப்பட்டவர் என்பதால் இந்த விவகாரத்தில் தொடர்பற்ற இவர்களை அழித்து உங்களை வளர்த்துக்கொள்ள நினைக்கிறீர்களா ? இப்படி எல்லா சாதி பிரச்சனைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண்பதாக நினைத்து, சில விஷமிகளின் கைப்பாவையாக தமிழ் சாதிகள் போய்கொண்டு இருக்கிறது. இதனால்தானோ என்னவோ இதுவரை இவர்களால் அதிகாரம் பெற முடியாமல் மற்றவர்களின் அடிமையாக இருக்க முடிகிறது.
பெரும்பான்மை சாதிகளிடையே ஒற்றுமையும், சமாதானமும் அவசியமானது ஒரு சமுதாய அமைப்பாக நாம் நம் சக பெரும்பான்மை சமூகங்களை வேண்டுவது, நமக்குள் உயர்வு தாழ்வு பார்ப்பதை தவிர்த்து அதிகாரங்களை பெறவும், பகிரவும் என்ன வழி என்பது குறித்து ஆராய வேண்டும், அதுதான் எதிர்காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்பது நமது வேண்டுகோளாகும்
- இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக