முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு – பட்டுக்கோட்டை
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்,
பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட "முத்தரையர்" நண்பர்கள் சந்திப்பு நிகழ்விற்க்கான அறிவிப்பினை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தோம், நண்பர்களின் ஒத்துழைப்புடன் 70 % கிராமங்களின் நண்பர்கள் இதுவரை தங்களது வருகையினை உறுதி செய்தும், ஆர்வத்தினையும், ஆதரவினையும் நல்கியுள்ளனர், வேலைப் பளு காரணமாக மற்ற நண்பர்கள் இன்னும் படிவம் பூர்த்திசெய்யவில்லை, இன்னும் நம்மிடம் நேரம் இருப்பதனால் விரைவில் அவர்களும் தங்களின் வருகையினை உறுதி படுத்துவார்கள் என்று நம்புகிறோம். இதற்கிடையில் நமது இன வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்ட பிற பகுதிகளை சேர்த்த தவிர்க்கமுடியாத நண்பர்கள் தாங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாமா ? என்ற கேள்வியினை பல வழிகளிலும்
முன்வைத்ததினை இந்த நிகழ்விற்க்கான "ஒருங்கிணைப்புக் குழு" பரிசிலனை செய்தது, பட்டுக்கோட்டை தொகுதியின் நிகழ் / எதிர்கால அரசியல் நிலை, மற்றும் இந்த பகுதியின் நம் குழந்தைகளின் கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த நிகழ்வாக நடத்துவது என்றும் "தவிர்க்க முடியாத நண்பர்களை" யும்
இணைத்து இந்த நிகழ்வினை நடத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நிரலில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது என்பதனை எமது இனத்தின் மீது பற்றுடைய நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும் மகிழ்வாய் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிற பகுதியின் நண்பர்கள் தாங்களின் மதிப்பு மிகுந்த கருத்துக்களுடன் இந்த நிகழ்வில் பங்கேற்க தங்களை அன்புடன் வரவேற்கிறோம். வருகைதரும் நண்பர்கள் தங்களின் வருகை குறித்து எங்களுக்கு தெரியப்படுத்தினால் அதற்க்கேற்ப வசதிகளை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாள் : 19.01.2013
நேரம் : காலை 11.00 மணி
கிழமை : சனிக்கிழமை
இடம் : ஸ்ரீ நாடியம்மாள் அசோசியேட், (முத்தரையர் சங்க கட்டிடம்),
பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை
E-Mail : sanjai28582@gmail.com
Skype ID : sanjaibcom
Face book : http://www.facebook.com/sanjai.gandhi.54
Twitter : sanjaigandhi
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக