திங்கள், 17 டிசம்பர், 2012

ஸ்டாலின் வரவேற்பு பேனர்கள்:நேரு உட்பட 8 பேர் மீது வழக்கு

திருச்சி: ஸ்டாலினை வரவேற்று ஃப்ளக்ஸ் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைத்த, முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட, எட்டுபேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் லோக்சபா தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று முன்தினம் காஜாமலையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை வரவேற்று, மாநகரத்தில் பல்வேறு இடங்களில், சாலைகளை டிரில்லர் மூலம் பறித்து, கட்சிக்கொடிக்கம்பங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், வரவேற்பு ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்கே.கே.,நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில், ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்த, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேரு, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், வெங்கடேஷ், குமார் ஆகிய ஆறு பேர் மீது, 10 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.இதேபோல, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே வரவேற்பு வளைவு அமைத்த, பகுதிச்செயலாளர் காஜாமலை விஜய் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, முத்தரையர் சிலையை மறைத்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்த, பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக