வியாழன், 20 டிசம்பர், 2012

அரசு தரப்பில் ஒரு சாட்சி இல்லை :கலவர வழக்கில் ஆர்.வி., விடுதலை

திருச்சி:
 
                     அரசு தரப்பில் ஒரு சாட்சி கூட ஆஜர்படுத்தப்படாததால், முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் விடுதலை செய்யப்பட்டார்.கடந்த மே, 23ம் தேதி, பெரும்பிடுகு முத்தரையரின், 1,337வது சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தினர் சார்பில் மாலை, மரியாதை செலுத்த, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக, வேன், கார் போன்ற வாகனங்களில் வந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, கோட்டை, காந்திமார்க்கெட், கண்டோண்மெண்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் (ஆர்.வி.,), அவரது மகன்கள் ராம்குமார், பிரபு, மருமகன்கள் உள்ளிட்ட, 65 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். ராம்குமார் மீது குண்டர் தடுப்புச்சட்டமும் பாய்ந்தது.கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கின் தீர்ப்பு, திருச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ரகுமான், அரசு தரப்பில் ஒரு சாட்சி கூட ஆஜர்படுத்தாததாலும், குற்றம் நிருபிக்கப்படாததாலும், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.அதையடுத்து, விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். காந்தி மார்க்கெட், கண்டோண்மெண்ட் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகள்,இன்று வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, அவ்வழக்குகளின் நிலை குறித்து தெரியவரும்.
 
News From : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக