திருச்சி: முத்தரையர் சிலையை மறைத்து, ஸ்டாலினை வரவேற்று பேனர் வைத்த, தி.மு.க.,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், அண்ணா விளையாட்டரங்கு அருகே, நாளை திருச்சியில் நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரை வரவேற்று திருச்சி முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல, சாலையில் டிரில்லர் மூலம் துளைபோட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டுள்ளது. ஒத்தக்கடை முத்தரையர் சிலையை சுற்றி கட்சிகொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணை செயலாளர் சம்பத்குமார், 27, என்பவர் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரில், "ஒத்தக்கடை முத்தரையர் சிலையை சுற்றிலும் தி.மு.க., கொடி நடப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி, ஸ்டாலினை வரவேற்று பெரிய அளவில் "கட்-அவுட்' வைத்துள்ளார். இதனால் சிலை மறைக்கப்படுவதோடு, அவமதிக்கும் வகையில் உள்ளது' என கூறியுள்ளார்.இதையடுத்து, கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சிகாமணி சம்பவ இடத்துக்கு சென்று பேனரை அகற்றினார். தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News From (Thanks To) -DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக