திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் சில்லறை வணிகர்களைக் காக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் மாவட்ட அமைப்புக் குழுத் தலைவர் மு. தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். மின்வெட்டை முறையாக முன்னறிவிப்பு செய்து மேற்கொள்ள வேண்டும். உறையூர் காவல் நிலையம் அருகிலுள்ள பூங்காவைச் சீர்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உணவின் அளவு, தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
 
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கல்லணைக் கிளிக்கூடு பகுதியில் அரசு நிலங்கள் உள்ளதால் நீச்சல் குளத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா அமைக்க வேண்டும். லால்குடி - கிளிக்கூடு இடையே கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
சங்க மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
NEWS FROM : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக