திருச்சி: "லோக்சபா தேர்தலில் திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் முத்தரையர்
வேட்பாளர்களையே, அனைத்து கட்சியினரும் அறிவிக்க வேண்டும்' என, தமிழ்நாடு முத்தரையர்
சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட
செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகி தங்கவேல் தலைமை
வகித்தார். இளைஞரணி செயலாளர் பெரியகோபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் பாஸ்கரன்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்."சங்க நிர்வாகி தேர்தல் நடத்திட ஏதுவாக,
12 பேர் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஃபிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி
தேர்தல் நடத்துவது. தமிழகத்தில் வேறு பெயர்களில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி
முதலீடு நுழைவதை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
திருச்சி லோக்சபா தொகுதியில் பல்வேறு பட்ட பெயர்களில், 2.80 லட்சம் முத்தரையர்
வாக்காளர்களும், பெரம்பலூர் லோக்சபா தொகுதியில், 3.60 லட்சம் முத்தரையர்
வாக்காளர்களும் உள்ளனர். திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் தனி பெரும்பான்மை
சமுதாயத்தைச் சேர்ந்த முத்தரையர் வேட்பாளர்களை அனைத்து கட்சியினரும் அறிவிக்க
வேண்டும்' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளர்கள்
மூர்த்தி, விஸ்வநாதன், சங்கர், இன்ஜினியர் பெருமாள், வக்கீல் உலகநாதன், கவிஞர்
லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
NEWS FROM : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக