மண்ணச்சநல்லூர்: கவுண்டம்பட்டி மேலூரில் மஹா சூலினி மாரியம்மன் கோவிலில், மஹாகும்பாபிஷேகம் நடந்தது.மண்ணச்சநல்லூர் தாலுகா, திருப்பைஞ்ஞீலி அருகே கவுண்டம்பட்டி மேலூரில் மஹா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்., 14ம் தேதி காலை, 7.30 மணியளவில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அன்று மாலை, ஐந்து மணியளவில் விநாயகர் வழிபாடு, புண்யாவாகனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளும், தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடந்தது.கும்பாபிஷேக நாளான நேற்றுமுன்தினம் காலை, ஐந்து மணியளவில் விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா சாந்தி ஹோமம், சகல தெவதா அனுக்ரக ஆராதனை, மஹா சூலினி மாரியம்மன் ஆராதனை ஹோமம், சப்த மாதா ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. காலை, 9.50 மணியளவில் கோவில் கோபுரத்துக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் வீர முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் சம்பத், ம.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெல்வம் மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம பட்டயதாரர்கள் திருப்பதி, ரெங்கசாமி, துரைசாமி, நடராஜன் செய்திருந்தனர்.
NEWS FROM : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக