காளையார்கோவில்: சிவகங்கை அருகே கோவில் திருவிழாவில், திடீரென வெடி வெடித்ததால், பக்தர்கள் உட்பட, 9 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில், பங்குனி திருவிழா, கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு சமுதாயத்தின் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, முத்தரையர் சமுதாயத்தின் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியினர் வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காரைக்குடி வெடி தயாரிப்பாளர் கண்ணன் வெடி போட்டு வந்தார். திடீரென வெடி வைத்திருந்த பாக்ஸ் வெடித்தது. வெடிகள் மேல் நோக்கி செல்லாமல், பக்தர்கள் கூட்டத்திற்குள் சென்றதால், சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் காயமடைந்தனர்.
இதில் கண்ணன்,36 என்பவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையிலும், இவரது உதவியாளர்கள், போஸ், 27,திவாகர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். தரிசனம் செய்ய வந்த கீழத்தூவல் கட்டக்குமார்,50, இவரது மனைவி தேன்மொழி,38.இவர்களது மகன் திருமுருகன்,18. சவரிஸ்வரன், இவரது மனைவி செல்வி, கவியரசன்,6 காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
பிரார்த்தனையுடன் ... இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
News From : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக