செவ்வாய், 2 ஏப்ரல், 2013

முத்தரையர் சங்கத்தினர் 57 பேர் கோர்ட்டில் ஆஜர்


திருச்சி, : பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணைக்கு முத்தரையர் சங்கத்தலைவர் உள்பட 57 பேர் திருச்சி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள்.

பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கடந்தாண்டு மே 23ம் தேதி திருச்சியில் நடந்தது. அப்போது தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்னையாக வெடித்தது. பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரமுயன்ற போலீசாரை முத்தரையர் சங்கத்தினர் தாக்கி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.


இதனையடுத்து முத்தரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு உள்ளிட்ட 57 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2வது அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விஸ்வநாதன், ராம்பிரபு உள்பட 57 பேரும் நீதிபதி முன் நேற்று ஆஜராயினர். வழக்கு விசாரணை 3ம் தேதி (நாளை) நடைபெறும் எனக்கூறி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News From : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக