சனி, 9 மார்ச், 2013

திருச்சியிலிருந்து ரயில்கள் முத்தரையர் சங்கம் ஆதரவு


திருச்சி

    பல்லவன், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை, திருச்சியில் இயக்க வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முத்தரையர் சங்கத்தினர் திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். விசு, தங்கவேல், மூர்த்தி, இன்ஜினியர் பெருமாள், சக்திவேல், கவிஞர் லோகநாதன், கோவிந்தராஜ் ஆகிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக பூனாட்சியை நியமனம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த , தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் நடக்கும் பாராட்டு விழாவில் திரளாக சங்கத்தின் பங்கேற்க வேண்டும். புதுக்கோட்டை வக்கீல் கண்ணன் படுகொலை சம்பவம் தொடர்பாக, உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் உள்ள மத்திய மண்டல போலீஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஊட்டத்தூர் நக்கன் சுருதிமான் ராஜமல்லன் எழுச்சி விழாவை, வரும் ஏப்ரல் மாதம் மண்ணச்சநல்லூரில் கொண்டாட வேண்டும். பல்லவன், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை, திருச்சியில் இருந்து இயக்க வலியுறுத்தி, வணிகர் சங்கம் சார்பில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முத்தைரயர் சங்கத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக .நா.,வில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள, 300க்கும் மேற்பட்ட செப்பு பட்டயங்கள் படியெடுத்து, அதில் உள்ள நோய் தீர்க்கும் செய்திகளை பாதுகாத்து, மக்களுக்கு உதவ, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வக்கீல் சிவராஜ், ராமமூர்த்தி, உலகநாதன், சீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இளைஞரணி செயலாளர் பெரியகோபால் நன்றி கூறினார்.

NEWS FROM : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக