செவ்வாய், 2 ஏப்ரல், 2013

முத்தரையர் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்


தா.பேட்டை, : தமிழ் நாடு முத்தரையர் சங்கத் தின் சார்பில் பெரம்ப லூர் நாடாளுமன்ற தொகுதி சங்க நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டம் முசிறியில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலா ளர் பெரிய கோபால் தலைமை வகித்தார். ஒன் றிய பொறுப்பாளர்கள் சங் கர், விஸ்வநாதன், ஸ்ரீரங் கன், ஆனந்த், விஜயராக வன், வீரமுத்து  முன்னிலை வகித்தனர். 

மாநில பொது செய லாளர் பாஸ்கரன் சிறப் புரை ஆற்றினர். பெரம்ப லூர் நாடாளுமன்ற தொகுதியில் முத்தரையர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மே மாதத்தில் நடத்துவது, முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை மாநில அவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது, சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பக்தர்களின் வச திக்கு அடிப்படை வசதி களை மேம்படுத்தி தரும் படி இந்து அறநிலையத்துறையை கேட்டுக் கொள் வது, துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏரியை சுத்தம் செய்திட துறையூர் நகராட்சியை கேட்டுக் கொள்கிறது.

லால்குடி ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடித்திட அர சை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. முன்னதாக குளித் தலை ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். முடிவில் இளைஞரணி சக்திவேல் நன்றி கூறினார்.

News From : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக