மதுரை, : மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 55ஆக குறைக்க வேண்டும் என அகில இந்திய முத்தரையர் இளைஞர் எழுச்சி பேரவை வலியுறுத்தி உள்ளது.
அகில இந்திய முத்தரையர் இளைஞர் எழுச்சி பேரவை செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. நிறுவன தலைவர் பாண்டிப்பொருள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிங்கராஜன், கண்ணன், திரவியம்பிள்ளை, பெரியகருப்பன், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பாலமுருகன், திருமேனி, ஜெயராஜ், பூசாரிநடராஜன், செல்வம், வேணுகோபால் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு இலவசமாக கவச உடை வழங்க வேண்டும். இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 55ஆக குறைக்க வேண்டும், கொலை, கொள்ளையை தடுக்க தெருக்களில் சுழல் காமிரா வசதி செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட வேண்டும். வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Thanks to : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக