வியாழன், 9 மே, 2013

ஒரு சிந்தனை....!!



சந்தோசம் எங்கே கிடைக்கும்...!!!  மிக எளிது "டாஸ்மார்க்ல்என்று இன்றைய இளைய தலைமுறை எளிதாகசொல்லிவிடும்இவர்களுக்காக ரமண மகரிஷி சொன்ன ஒரு கதை....

வசதியான மனிதனின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்த உணைவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்க்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால், அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது தன் ரத்தத்தை ருசித்த நாயோ, ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், "மட நாயே ! அது காய்ந்துபோன எலும்புநீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்துவெளிப்படும் ரத்தம் இல்லைஉன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் !" என்று சொல்ல... வழிப்போக்கரைப் பார்த்துஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

"இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது !" என்று சொல்லி, காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள், இதைத்தான் “DOG’S LOGIC”  என்று சொல்கிறோம் !

சிந்தித்துப் பாருங்கள்... காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக