திங்கள், 10 ஜூன், 2013

முத்தரையர் பாடல்கள்


நாம் நேற்றைய தினம் முத்தரையர் பாடல்கள் தொடர்பாக இட்ட பதிவு "திருடனுக்கு தேள் கொட்டிய கதை" யாக யாருக்கோ வலித்திருக்கிறது. நம் சமூகம் குறித்து யாருமே அக்கறை எடுத்துக் கொள்ளாத காலகட்டத்தில் திரு. வளப்பக்குடி வீரசங்கர் தனது சொந்த உழைப்பில், சொந்த முயற்சியில் சமூகப் பாடல்களை பாடி வெளியிட்டு இருக்கின்றார்கள், அவருடைய உழைப்பிற்க்கேற்ற ஊதியம் அவருக்கு கிடைக்க வேன்டும் என்ற எண்ணத்தில் அவருடைய பாடல்கள் அடங்கிய CD யை அவரிடமே பெற்றுக் கொள்ளுங்கள் என்று நாம் பதிவு செய்திருந்தோம், அதுதான் நியாயமும் கூட….!! ஆனால் சிலர் பிளாக்கில் வெளியிட்டு இருக்கிறார்களாம் "ஊரான்விட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" என்ற பழஞ்சொல்லுக்கு ஏற்ப உழைத்தவர் ஒருவர் இருக்க இவர்கள் "இலவசமாக" தருகிறார்களாம், இதுதான் "கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு" உடைப்பதோ....??

இதில் "தவளை தன் வாயால் கெடும்" என்ற சொல்லுக்கு ஏற்ப எதோ பணம் விவகாரம் பற்றியும் உளரிக்கொட்டி இருப்பதாகவும் தகவல், இப்போதுதான் நமக்கும் ஞாபகம் வருகிறது சில ஆண்டுகளுக்கு முன்பு "இணையதளம்" தொடங்கப்போவதாக சொல்லி சில லட்சங்கள் வரை வசூல் செய்து, அதில் சில ஆயிரங்கள் மட்டும் (!) செலவு செய்து "இணையதளம்" தொடங்கியதாகவும் (அது இப்போது இயங்கவில்லை என்பது வேறுகதை..) மீதி பணம் சுருட்டப்பட்டதாகவும் கேள்வி..!

மதுரை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு இறந்துபோன உறவினரின் பெயரை சொல்லியும், சென்னையில் கட்டப்பட்டுவரும் "சங்க கட்டிடத்திற்க்காக" என்று சொல்லியும் வசூல் நடந்ததாகவும் அது உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்றும் ஒரு பேச்சு இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் ஊர் ஊராய் கூட்டம் நடத்தி நம் மக்களின் ஆதரவை பெற்றுத்தருவதாக கூறி ஒரு பிரதான அரசியல் கட்சியில் இருந்து லட்ச கணக்கில் வாங்கி வருவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறு இருக்க பொத்தாம்பொதுவாக சில குற்றச்சாட்டுகளை சொல்லி இருப்பதாகவும் தகவல், யாரோ யார் நடத்திய கூட்டத்தின் புகைப்படங்களையோ காட்டி வசூல் செய்வதாக சொல்லி இருக்கிறார்களாம், அது யார் ? இது போன்று இனத்தின் பெயரை சொல்லி வசூலில் இறங்கும் யாராக இருந்தாலும் நம் மக்கள் முன்னால் அடையாளப்படுத்தப் பட வேண்டும், யார் என்பது குற்றம்சாட்டியவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் அது யார் என்று அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் உரிய ஆதாரங்களுடன் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தன்னிலை விளக்கம் : "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" எந்த காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை... !! பட்டுக்கோட்டையில் நடந்த "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்ச்சியினை நடத்த தீர்மானித்த நாங்கள் மூவரும், (திரு.லெனின் ரெங்கராஜன், திரு, கண்ணன் நாதன், மற்றும் நான் (சஞ்சய்காந்தி அம்பலகாரர்),) அதில் ஏற்பட்ட செலவினங்களை பகிர்ந்துக் கொண்டோம் இவர்கள் தவிர இந்த கூட்டத்தின் பெயரால் (வேறு எந்த காரணத்தை சொல்லியும்) யாரிடமும் ஒரு ரூபாய் கூட நாங்கள் வாங்கியது கிடையாது என்பதனை நம் மீது நம்பிக்கை வைத்த நண்பர்களுக்கு தெரிவிப்பது நமது கடமை...

இது போன்று பகிரங்கமாக விளக்கத்தை கூட்டம் நடத்தி வரும் நபர்கள் தெரிவிப்பார்களா ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக