சனி, 8 ஜூன், 2013

முத்தரையர் பாடல்கள் (MUTHARAIYAR MP3 SONGS)

முத்தரையர் பாடல்கள் (MUTHARAIYAR MP3 SONGS)


இனிய உறவுகளே... வணக்கம் முத்தரையர் சமூதாயம் குறித்த விழிப்புணர்வும், உணர்ச்சியும் மிக்க பாடல்கள் கிடைக்குமா ? என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் சிலர் பாடல்களை இலவசமாக தரப் போவதாக (!) சொல்லி வருவதாகவும் நண்பர்கள் சொன்னார்கள், இதுவும் வழக்கம் போல ஏமாற்றும் வேலையோ அல்லது அவர் சார்ந்த கட்சியின் புகழ் பாட இதுவும் ஒரு வழியோ யாமறியோம் (!?).

இதுவரை நான் அறிந்து சமூகப் பாடல்களை பாடி வெளியிட்டு இருப்பவர்கள் இரண்டு பேர் ஒருவர் வளப்பக்குடி வீரசங்கர், மற்றொருவர் மதுரை மாவட்டம் வலையங்குளத்தை சேர்ந்தவர் (பெயர் தெரியவில்லை..தெரிந்தவர்கள் சொல்லவும்). இவர்களை தவிர புதிதாக யாரும் பாடல்கள் பாடியதாகவோ, வெளியிட்டதாகவோ தகவல் இல்லை,

இதில் எனக்கு அறிமுகமான நண்பர் வளப்பக்குடி வீரசங்கர் இவரின் பாடல்கள் நம் உணர்வுகளை உசிப்பிவிடுவதாகவும், எளிமையாக நம் வரலாற்றை சொல்வதாகவும் இருக்கும், பல்வேறு திரைபட பாடல்களை பாடி இருக்கும் இவர், தொடர்ந்து மேடை கச்சேரிகளையும் செய்துவருகிறார், நமது "முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின்" திறன்மிக்க தலைவர்களில் ஒருவராகவும் இருக்கும் இவருடைய பாடல்கள் நம் மக்கள் கேட்க வேண்டிய ஒன்றாகும்

நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்யும் கோவில் திருவிழா போன்ற விசேசங்களுக்கு இவரின் குழுவினரின் கச்சேரியை அமைத்தால் அவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும், இவரின் பாடல்கள் அடங்கிய CD (Mutharaiyar MP3 Songs) வேண்டுவோர் நேரிடையாகவே இவரை தொடர்பு கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு அதனை நியாயமான விலையில் தருவார், சிலர் சொல்லுவது போல "இலவசம்" என்ற சொல்லில் மயங்கி கிடக்க வேண்டாம்.

அன்புடன்...

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக