மண்ணச்சநல்லூர்: தமிழ்நாடு முத்தரையர் சங்க புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மண்ணச்சநல்லூர் கோபால் மஹாலில், தமிழ்நாடு முத்தரையர் சங்க, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக பாஸ்கரன், மாவட்ட செயலாளராக வக்கீல் சிவராஜ், பொருளாளராக குஞ்சான் உட்பட, 15 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையாளராக காஞ்சி காடக முத்தரையரும், பார்வையாளராக முரசு வீரையாவும் தேர்தலை நடத்தினர். பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கல்வி, வேலைவாய்ப்புகளில், முத்தரையர்களுக்கு, 15 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க, மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது, திருச்சி, பெரம்பலூர், கரூர் லோக்சபா தொகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தவும், பான்மசாலா, குட்கா, போன்ற பொருட்களுக்கு தடை விதித்ததற்கு முதல்வரை பாராட்டியும், கள்ள லாட்டரி அதிபர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், மணப்பாறையில் காகித தொழிற்சாலை அமைக்கவும், கல்லணையில் கரிகாலனுக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டதற்கும், முத்தரையர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News From (Thanks To) : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக