பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற
மாணவ,மாணவியர்க்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரி.அழகப்பன் தலைமை
வகித்தார். வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.
பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கே.கே. செல்வகுமார் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு
பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி
வாழ்த்தினார். தஞ்சை அண்ணா பரமசிவம், நிர்வாகிகள் சித்தாண்டி,ஆண்டிஉள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
NEWS FROM (THANKS TO): DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக