திங்கள், 3 ஜூன், 2013

"புறக்கணித்தால் புறக்கணிப்போம்': தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு மிரட்டல்

திருச்சி: குறிப்பிட்ட லோக்சபா தொகுதிகளில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, வலியுறுத்தி, தி.மு.., - .தி.மு.., கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போல், திருச்சியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். இதற்காக, இரண்டு நாட்களாகவே, உளவுத் துறை போலீசார், மாநகரிலும், புறநகரிலும், முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போஸ்டர் ஏதும் ஒட்டப்படுகிறதா என, கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருச்சி மாநகர் முழுவதும், முத்தரையர் வளர்ச்சி சங்கம் என்ற பெயரில், "புறக்கணித்தால் புறக்கணிப்போம்; அங்கீகரித்தால் ஆதரிப்போம்' என்ற தலைப்பிட்டு, போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த போலீசார், போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அப்படியே உள்ளன.

போஸ்டரில் கூறியிருப்பதாவது: திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய லோக்சபா தொகுதிகளில், முத்தரையர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அங்கு, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தி.மு.., - .தி.மு.., ஆகிய, இரு கட்சிகளும், போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி நிறுத்தும் கட்சிக்கு, முத்தரையர் வளர்ச்சி சங்கம் தேர்தலில் ஆதரவு அளிக்கும். இல்லாவிட்டால், முத்தரையர் வளர்ச்சி சங்கம், வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தலில் போட்டியிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா வரும் நாளில், திடீரென, மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, போலீசார் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகையால், முடிந்தளவு, ஒட்டப்பட்ட போஸ்டர்களை, இரவோடு, இரவாக கிழித்து விட்டனர். ஏற்கனவே, திருச்சி மாவட்ட, .தி.மு..,வில், முத்தரையர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற புலம்பல் உள்ளது. அச்சூழலில், திடீரென, தி.மு..,- .தி.மு..,வை மிரட்டும் தொனியில், முத்தரையர் சங்கம் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News From : DINAMALAR


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக