வியாழன், 6 ஜூன், 2013

சங்க கொடியேற்று விழா

பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்சார்பில் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு ஊர் அம்பலம் கருத்தான் தலைமை வகித்தார். ஊர் சேர்வை தவிடன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கே. செல்வகுமார் பங்கேற்று சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிர்வாகிகள் கார்த்திக், வெள்ளைச்சாமி, துரை, மாணிக்கம், மலையாண்டி, நல்லு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். பழனிச்சாமி நன்றி கூறினார்

News From : DINAMALAR 

BY. RAJAKUMARAN 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக