சாதி ஒழிப்பு...!!!
எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு கும்பல் "சாதி ஒழிப்பு" கோசம் போடும், அவர்களுக்கு வேறு ஒரு முகமும் உண்டு அது திராவிடம், தமிழ்தேசியம், இடதுசாரி, தலித்தியம், பத்திரிக்கையாளர், சமூக (!) சிந்தனையாளர், என்று நேரத்திற்க்கும், இடத்திற்க்கும் தகுந்தார்போல தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ளும் "பச்சோந்திகள்" போல இவர்களும் மாறிக் கொள்வார்கள். இந்த போலி புரட்சியாளர்களின் 100 ற்க்கு 99 பேர் தங்கள் சாதியோடு எதேனும் ஒரு வகையில் தொடர்பினை கொண்டவர்களாக இருப்பார்கள், வெளிவேசத்திற்க்காக "சாதி இல்லை" என்று கோசம் போடுவார்கள். இவர்கள் ஆடை இல்லாமல் நின்று கொண்டு மற்றவர்கள் நிர்வாணமாக இருப்பதாக சொல்லும் புதிய சிந்தனையாளர்கள்.
ஏன் சாதி வேண்டாம் ? என்ற கேள்வியை நாம் முன் வைத்தால் அவர்களின் பதில் இப்படி இருக்கும்.
1. சாதி தீண்டாமையை ஏற்படுத்துகிறது.
2. சாதி வன்முறையை தூண்டுகிறது.
3. சாதி சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
4. சாதியால் தமிழ் சமூகத்தில் பிளவு வருகிறது.
இதை தாண்டி சொல்வதற்க்கு இவர்களிடம் வழுவான காரணங்கள் இருக்க முடியாது.
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்வார்கள் சாதி என்பது வர்ணங்கள் தானே (பிராமணர், சத்திரியர், வைஷ்ணவர், சூத்திரர்) என்று, வர்ணங்களின் பெயரைச் சொல்லி இனங்களுக்கிடையே வன்முறையை தூண்டுவதும் இந்த புரட்சியாளர்கள்தான். இப்போதைய சாதி என்பது இனக்குழுக்கள் தானே தவிர, இதனை வெறும் நான்கு பிரிவுகளாக பிரிக்க நினைப்பது தவறு. இந்த "இனக்குழுக்கள்" என்பது குடும்ப அமைப்பை ஒத்தது இதில் ஒரு குடும்பத்தில் இருக்கும் எல்லா உறவுகளின் மொத்த கூட்டே "சாதி" என்று அடையாளப் படுத்தப்படுகிறது.
1.தீண்டாமை…!!
தீண்டாமை என்பது எந்த சாதியக்குழுக்களாலும் ஏற்படுத்தப்பட்டதல்ல, இது காலத்தின் போக்கில் எங்கோ நடந்த தவறுதானே ஒழிய இது சாதிகளின் குற்றமல்ல, சரி சாதிகளை ஒழித்துவிட்டால் "தீண்டாமை" இல்லாமல் போய்விடுமா ? அது வேறு வேறு வடிவில் வந்தால் அதற்க்கான தீர்வு என்ன இருக்கிறது இந்த சமூகப் (!) புரட்சியாளர்களிடம், பொருளாதார அடிப்படையில் (பணக்காரன் ஏழையை ஒதுக்கும் போது), நிறத்தின் அடிப்படையில் (எல்லாவற்றிர்க்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் இந்த புரட்சியாளர்கள் அமெரிக்காவில் எந்த சாதி அமைப்பு இருக்கிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும், ஏன் அங்கு கருப்பின மக்கள் வெள்ளையின மக்களால் "தீண்டப்படுவது இல்லை" என்பதையும் சொன்னால் புரிதலுக்கு உதவும்) இன்னும் இன்னும் மதத்தின் பெயரால் (மியான்மர் புத்தமதம் மற்றும் இஸ்லாமியர் பிரச்சனை), மொழியின் பெயரால் "தீண்டாமை" ஏற்படும் போதெல்லாம் இவர்கள் பொருளாதாரம் வேண்டாம் என்றும், நிறத்தினை ஒழித்து விட வேண்டும் என்றும், மதத்தினை, மொழியினை உதறிவிட வேண்டும் என்றும் சொல்வார்களா ? அல்லது அந்த அமைப்புகளெல்லாம் அப்படியே இருக்க அதில் இருக்கும் "தீண்டாமை" ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வார்களா ? நிச்சயமாக "தீண்டாமை" என்பது எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது, அதற்க்காக "சாதியை" ஒழிக்க வேண்டும் என்பது, ஒரு மனிதனை அவன் மனைவியை, மக்களை, பெற்றோரை, உற்றார் உறவினைரை உதறிவிட்டு ஊதாரிதனமாக இரு என்று சொல்வது போன்றதாகும் உண்மையில் சாதிய குழுக்கள், என்பது ஒரு குடும்பத்தின் எல்லா உறவுகளின் கூட்டே ஆகும்.
2. சாதி வன்முறையை தூண்டுகிறது…!!!
நிச்சயமாக இல்லை.. ! சாதி எப்போதும் வன்முறை செய்யச் சொல்லவில்லை, யாரோ செய்யும் வன்முறைகளுக்கு "சாதியின்" சாயம் பூசப்படுகிறது, ஒவ்வொரு இனக்குழுக்களுக்குமான அமைவிடங்கள், கால நிலைக்கு ஏற்றவாறு தங்கள் வழிபாட்டு முறைகள், கடவுள் உருவங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்று எல்லாம் உண்டு இதில் மாட்டுக்கறி தின்னும் "சாதியும்" இருக்கும், சாராயம் குடிக்கும் "சாதியும்" இருக்கும், இதில் தவறுகள் இருக்கலாம், ஆனால் இதுதான் அந்த இனக்குழுக்களுக்கான அடிப்படை அவர்கள் அமைவிடத்திற்க்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறை, இதில் இருக்கும் குறைகள் களைய இந்த "புரட்சியாளர்கள்" குரல் கொடுப்பார்களேயானால் அதில் நியாயம் இருக்க முடியும், காரணம் இவர்கள் பிறந்த "சாதியிலும்" எதேனும் குறைகள் இருக்க முடியும். சில இனக் குழுக்கள் அவர்களின் தொழில் சார்ந்தும் இருக்கலாம் (இது தொழில் சார்ந்தது மட்டுமே.. தீண்டாமைக்கு இதனையும் ஒரு காரணம் ஆக்கி விட்டார்கள்) , அதில் சில இனக்குழுக்களுக்கு "போர்புரிதல்" குலத்தொழிலாக இருக்கலாம், அவர்களுக்கு மாற்று தொழில் வாய்ப்பு இல்லாதபோது இத்தகைய "வன்முறையிலும்" ஈடுபடலாம், அதற்க்காக அது சரி என்பது எனது வாதம் இல்லை, அவர்களுக்கு நவீன யுகத்திற்க்கு ஏற்ப தொழில் வாய்ப்புகள் வழங்கி அதனையும் சரி செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால் "சாதி" என்பதை நான் அறிய விரும்பியது, அறிந்தது அத்தனையும் இன்று "சாதியை ஒழிக்கப் பாடுபடும் புரட்சியாளர்களில் போலியான முகங்களை" கண்டப் பின்னர்தான், இவர்கள் அவ்வளவு பேருமே "சாதி வெறியர்கள்" என்பது எனது ஆழமான குற்றச்சாட்டு. சாதி மீது வன்முறை சுமத்தப்பட்டதுதானே தவிர, சாதி வன்முறையால் ஆனது கிடையாது.
3. சாதி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது…!!!
உண்மைதான் சாதி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது, எப்படி என்றால் "இடஒதுக்கீடுகள்" மூலம், இடஒதுக்கீடுகள் தவறு என்று சொல்லவில்லை, அது அவசியம்…!!! யாருக்கு என்பதில்தான் பிரச்சனையும், ஏற்றத்தாழ்வுகளும் "இடஒதுக்கீட்டினை” பெரும் எந்த சமூகமும் "கிரிமிலேயரை" ஏற்றுக் கொள்வது இல்லை. ஒருவேளை "கிரிமிலேயர்" ஏற்கப்படுமேயானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் வர வாய்பில்லை 63 ஆண்டுகளாக சில சமூகக் குழுக்கள் தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கான பலனை அனுபவித்து வந்தும் இன்னும் இன்னும் அந்த சமூகங்கள் முழுமையான வளர்ச்சியை பெறவில்லை, அதற்க்கு காரணம் யார் ? அந்த சாதியக்குழுக்களில் குறிப்பிட்ட சிலர் பலனடைவதால் அதே சாதியக்குழுக்களில் இன்னும் சரியான வளர்ச்சியினை, சமமான ஒரு நிலையினை அடைய முடியவில்லை. இதற்க்கு தீர்வுகள் இரண்டே இரண்டுதான் உள்ளன ஒன்று பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, இரண்டாவது 100% இடஒதுக்கீடு முதலாவது வழியில் பலனடைந்தவர்கள் தொடர்ந்து பலன்பெறுவது தடுக்கப்பட்டு, மற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும், இரண்டாவது வழியில் எல்லா சமூகங்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையான ஒதுக்கீடுகள் கிடைக்கும், எப்படியும் திறமையானவர்கள் மட்டுமே பலன்களை அனுபவிக்க முடியும் அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும். ஆகவே சாதி ஏற்றத்தாழ்வு என்பது இன்றைய சமூகத்தில் இடஒதுக்கீடு போன்ற புரக்காரணிகளால் ஏற்பட்டதுதானே தவிர இதற்க்கு இன்றைய சாதிய அமைப்பு காரணம் இல்லை..!!!
4. சாதியால் தமிழ் சமூகத்தில் பிளவு வருகிறது...!!
சாதியால் பிளவுகள் இல்லை, நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த போலியான திராவிட, தமிழ்தேசிய, தலித்திய, பொதுவுடமையாளர்களால் பிழைப்பிற்க்காக ஏற்படுத்தப்படும் பிரிவுகள்தான் இங்கே சாதிய சமூகங்களுக்கு இடையே பிளவுகள் வர காரணம் சாதிகளுக்கு இடையே இணக்கம் உருவாவதை ஒரு போதும் இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், அதில்தான் அவர்களின் "பிழைப்பே" இருக்கிறது.
ஆக சாதியால், சாதியக் குழுக்களுக்குள் பிரச்சனை என்று இந்த விசயத்தை நோக்குவதைவிட, இதற்க்கான களையப்பட வேண்டிய காரணிகள் சாதிக்கு வெளியில்தான் இருக்கிறது என்பதை "தமிழ் சமூகம்" உணரவேண்டும். "சாதிகள்" இல்லை என்று சொல்லும் அத்தனை போலிகளையும் அடையாளம் காண வேண்டும். சாதியின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களும் பல நேரங்களில் இத்தகைய புறக் காரணிகள் உருவாக காரணமாகி விடுகின்றனர் அது நேரடியாக அந்த பிழைப்பு வாதிகளை இல்லாமல் "சாதிய அமைப்புகளை" வன்முறையானதாக வெளிக்காண்பிக்கிறது. இதில் எனதருமை "தமிழ் சாதிகள்" உண்மையை ஆய்ந்து இத்தகைய புறக்காரணிகளை களைய வேண்டும், சந்தர்ப்பவாதிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
இறுதியாக கடைசி தமிழன் (இந்தியன்..!?) இருக்கும்வரை "சாதிகளை " யாராலும் ஒழிக்க முடியாது, ஒழிப்பதாக சொல்லி பிழைக்க மட்டுமே முடியும்..!!!
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக