வியாழன், 25 ஜூலை, 2013

முத்தரையர் சங்கம் கோரிக்கை

பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இந்த சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அண்மையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். 

 கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: 


 பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயருகிறது. எனவே, இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
 முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
 நொச்சியம் - ஸ்ரீரங்கம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும், பொதுமக்கள் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News Source : DINAMANI
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக