மக்களவைத் தேர்தலில் முத்தரையர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம்
அளிக்க வேண்டும் என முத்தரையர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்
இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 பிரிவுகளை உள்ளடக்கி தமிழக அரசால்
அறிவிக்கப்பட்டுள்ள முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்து, 10
சதம் உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
75 சதம் முத்தரையர் மக்களைக் கொண்டுள்ள
புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
எம்.பி. தேர்தலில் திருச்சி, சிவகங்கை
தொகுதியில் முத்தரையரை வேட்பாளராக அறிவிக்கும் அரசியல் கட்சியையே ஆதரிப்பது என்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூ.சி. தமிழரசன்
தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலர் ரா. திருமலைநம்பி, பொருளர்
மா. சத்தியமூரத்தி, மாவட்ட அமைப்பாளர் வஞ்சித்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள்: தலைவராக க. ரமேஷ்,
செயலராக ஆர். செந்தில், பொருளராக ரா. வெற்றிவேல், துணைத் தலைவர் ம. கதிர்வேல்,
துணைச் செயலர் வெ. செல்லபாண்டியன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தொகுதி,
வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக