ஆலங்குடி, : ஆலங்குடி அடுத்த திருவரங்குளத்தில் முத்தரையர் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திருமலைநம்பி, பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் வஞ்சித்தேவன் முன்னிலை வகித்தனர். தொகுதிப் பொறுப்பாளர்கள் திருமயம் சுரேஷ், புதுக்கோட்டை ஆறுமுகம், கறம்பக்குடி கோவிந்தராஜ், புதுகை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், திருவரங்குளம் முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வம், மேலதேமுத்துப்பட்டி முத்தையா, பசுவயல் பிரபு கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியத் தலைவராக ரமேஷ், செயலாளராக செந்தில், பொருளாளராக வெற்றிவேல், துணைத்தலைவராக கதிர்வேல், துணைச் செயலாளராக செல்லப்பாண்டியன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், தமிழக அரசு முத்தரையர் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி என அறிவிக்க வேண்டும். 75 சதவீத முத்தரையர் மக்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்துத் தர ஆவண செய்ய வேண்டும். திருச்சி, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிகளில் முத்தரையர் ஒருவரை வேட்பாளராகத் தேர்வு செய்ய தமிழக அரசியல் கட்சிகளை வலியுறுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரபு நன்றி கூறினார்.

News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக