உறவுகளுக்கு வணக்கம்...!!!தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்தம் வளங்களை சுரண்டி அவர்தம் உழைப்பால் பல வளங்களை உருவாக்கி, தம் மண் ஆசைக்காக அண்டை நிலத்தோடு பகை கொண்டு பல போர்களை நடத்தி சர்வாதிகாரத்தோடு இந்த தமிழ் மண்ணை சில பேரரசுகள் ஆண்டுகொண்டிருந்தபோது அன்றைய தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய கருநாடகப் பகுதியிலிருந்து ஒரு பெரும்படை புறப்பட்டு மைய தமிழகத்தில் அரசோச்சிக்கொண்டிருந்த சோழ, பாண்டியர்களை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் அடக்கி அம்மக்களை நன் முறையில் நடத்தி பொதுவுடமை, மக்களாட்சி, போன்ற இன்ற கம்யூனிசத்தின்கொள்கைகளுக்கு அன்றைக்கே உரமிட்டு அதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர்கள்….. நம் முன்னோர் களப்பிரர்கள்,
ஆம் எந்த மன்னர்களின் காலம் இந்த மண்ணின் இருண்ட காலம் என்றார்களோ அந்த களப்பிரர்களின் காலம்தான்….. ஒரு சிறிய திருத்தம் இங்கு...களப்பிரர்களின் காலம் இருண்ட காலம்தான்...யாருக்கு?
காலம் காலமாக கல்லயெல்லம் காட்டி கடவுள் என்று சொல்லி எம் மக்களை யார் சிந்திக்க விடாமல் செய்தார்களோ அவர்களுக்கு..!! பிரம்மதேயம் என்ற பெயரில் விவசாய நிலங்களை வளைத்துப்போட்டு கொண்டவர்களுக்கு..!! தம் இச்சைகளை தனித்துக் கொள்ள தமிழ் அரசர்களுக்குள் பகை மூட்டி அதன் மூலம் குளிர் காய்ந்தவர்களுக்கு..!!பார்பனர்களுக்கு சோழர்களும்,பாண்டியர்களும்,போ ட்டி போட்டு நிலங்களை வாரிவழங்கியபோது, அந்த நிலங்களை மீட்டெடுத்து அதை மக்களுக்கே திருப்பி கொடுத்தவர்கள் களப்பிரர்கள், பார்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்றபோது, கல்வியை மூன்றாம் நூற்ற்றண்டிலேயே அனைவருக்கும் பொதுவாக்கியவர்கள் களப்பிரர்கள், மற்ற மன்னர்கள் கோயிலையும், மடங்களையும் கட்டிக்கொண்டிருந்த போது, பக்தி என்ற பெயரால் ஏமாற்றப்பட்டிருந்த மக்களுக்கு விழிப்புணர்வை கல்வியின் வாயிலாக வழங்கியவர்கள் களப்பிரர்கள்....!!
சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக்கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி, திருக்குறள் இப்படி எண்ணற்ற பல நூல்களை தமிழுக்கு அளித்தவர்கள் களப்பிரர்கள், மேலும் வட்டெழுத்தை உருவாக்கி நம் தமிழுக்கு வடிவத்தை கொடுத்தவர்கள் களப்பிரர்கள்..!! பின்பு ஏன் அவர்களின் காலம் வரலாற்றில் இருண்ட காலமாக பதிவு செய்யப்பட்டது.....???? முதல் காரணம் அவர்கள் முத்தரையர்கள், அடுத்த காரணம் பார்பனர்களை எதிர்த்தது...!!
இதன் வெளிப்பாடுதான், வரலாற்றை எழுதிய பார்ப்பான் நமக்கு கொடுத்த பரிசு இருண்டகாலம்..!! ஆரியனுக்கு மண்டியிட்டு எவனெல்லாம் இந்த மண்ணை ஆண்டானோ அவனது ஆட்சி அனைத்தும் பொற்காலம், ஆரியனை எதிர்த்து இம் மண்ணின் மைந்தர்களுக்காக, அவர்களது விடுதலைக்காக, தமிழ் ஏற்றத்திற்காக உதவியவர்கள் காலம் வரலாற்றின் இருண்ட காலம்..!! இதுதான் தமிழனின் வரலாறு எழுதப்பட்ட முறை...!!!
ஆனால் 5 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட வரலாற்றை இன்றைக்கு வரைக்கும் நம்மால் மாற்ற முடிய வில்லை... உண்மை நிலையை எடுத்துக்கூறும் வழி முத்தரையருக்கு தெரியவில்லை, களப்பிரன்தான் முத்தரையன் என்பதே மாற்றான் சொல்லித்தான் அறியும் நிலையில் இன்றைய களப்பிர வம்சம் இருக்கின்றது....!!
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது பழமொழி ஆனால் பசித்தபோதும் மாற்றானிடம் உணவுக்காக மண்டியிடாதவன் முத்தரையன், இதை யார் சொன்னது? சமணர்கள்... நாலடியாரிலே 296 வது பாடலிலே 'நல கூர்ந்தார் கண்ணும் பெரு முத்தரயரே செல்வரை சென்று இரவாதவர்' என்று எம் இனத்தின் பெருமையை அன்றைக்கே பறைசாற்றியுள்ளது நாலடியார். (வேறு எந்த சாதிக்கேனும் நாலடியார் இடம் கொடுத்துள்ளதா ?? ) இப்படி வரலாற்றுப் பெருமைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள முத்தரையர்களின் தற்கால நிலை என்ன? கோட்டை கட்டி ஆண்ட இனம் இன்று குடிசைக்குள் முடக்கப்பட்டுள்ளதே இது தற்செயலாக நடந்ததா...? இன்றைய தமிழகத்தின் வளம் கொழிக்கும் டெல்டா பகுதிகள் ஒரு காலத்தில் காடாகவும், மேடாகவும் கிடந்த போது அதை சரிசெய்து விவசாயப்பரப்பாக மாற்றியவர்கள் குறுநில முத்தரையர்கள், இப்படி தமிழ் உலகிற்கே சோறு போட்டவர்களுக்கு இன்று தமிழக அரசு சோறு போடுகின்றது செய் நன்றி மறவாமல் ரேஷனின் மூலம்..!!!
வரலாற்றிலே பெயரே இல்லாத சமூகமெல்லாம் இன்றைக்கு பேரினமாக தம்மை அடையாளப் படுத்திக்கொள்ளும்போது தமிழ் வரலாற்றை உருவாக்கிய முத்தரையர்கள் எந்த நிலையில் உள்ளார்கள்? தம் உறவுகள் எங்கெங்கு இருக்கின்றார்கள்? எந்த நிலையில் இருக்கின்றனர்? என்ன பெயரில் இருக்கின்றனர்? என்று எத்தனை முத்தரையனுக்கு தெரியும்? முத்தரையர் சாதி என்பது திருச்சியிலும், புதுக்கோட்டையிலும், கீழத் தஞ்சையிலும் மட்டுமே பரவி வாழும் ஒரு சமூகமாக மட்டுமே பார்க்கப்படுகின்றது...உண்மை என்ன?
முத்தரையர்களே இல்லை என்று கருதப்பட்ட வட மாவட்டங்களிலே இன்றைக்கு 24 லட்சம் முத்தரையர்கள் வாழுகின்றனர் என்ற உண்மைத்தகவல் எத்தனை முத்தரையர்களை சென்று சேர்ந்துள்ளது? வட மாவட்டங்களிலே காவல்காரனாக, வேட்டைக்காரனாக, வேட்டுவனாக, பாளையக்காரனாக, நாயுடுவாக -முத்துராஜா நாயுடு, நாயக்கனாக -முத்துராஜா நாயக்கனாக, தலையாரியாக, லட்சக்கணக்கிலே வாழும் ஒரு பெருங்கூட்டம்...முத்தரையர்கள்.
மத்திய மாவட்டத்தில் அசைக்க முடியாத மிகப்பெரும் சக்தி முத்தரையர்கள், தென் மாவட்டங்களில் அஞ்சாமல் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வீரப்பரம்பரை எம் வலையர்கள், மதுரை பகுதியில் மூர்க்ககுணத்தோடு வாழும் மூப்பனார்கள் அவர்களும், எம் மேற்கு மாவட்டத்திலே வாழும் வேட்டுவர்கள் அவர்களும் எம் இனமே…!!!
அரசியலாக்கப்பட்டுள்ள திராவிடம், மார்க்சியம், தமிழ் தேசியம், மதவாதம் போன்றவற்றுக்கு தொடர்ச்சியான ஆதரவினை தருபவர்கள் முத்தரையர்கள், ஆனால் முத்தரையர்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரும் அரசியல் கட்சிகளுக்கு அமரும் வரை எம் ஆதரவு தேவை, அமர்ந்த பின்பு முத்தரையர்கள் பெயரைக் கேட்டாலே தொல்லை, இது இன்று நேற்று அல்ல, காலம் காலமாக தொடருவது... வாக்கு வங்கிகளாகவே எம் மக்களை பார்த்துப் பழக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, எம் இனத்திற்கு சம உரிமை வழங்குவதை ஏனோ சகித்துக்கொள்ள முடியவில்லை...!!!
சிறுபான்மை சாதிகளுக்கு அமைச்சரவையிலே கொடுக்கப்படும் இடங்களில் பாதி அளவு கூட எமக்கு சட்டமன்றத்திலே கொடுக்கப்படுவது கிடையாது. காரணம் சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாமல் முத்தரையர்கள் வாழ்ந்து வருவதுதான்...சில குறிப்பிட்ட சாதிகளின் அரசியல் சுய லாபத்திற்கு பகடைக்காயாகவே வாழ்ந்து கெட்ட சாதி தமிழ் முத்தரையர் சாதி, ஊறிப்போன திராவிடச் சிந்தனையிலிருந்தே வெளி வரத்தெரியாமல் காலம் காலமாக ஆதிக்க சாதிகளுக்கு அடிமைப்பட்டே கிடக்கும் சாதி தமிழ் முத்தரையர் சாதி... அதிகாரம் என்றால் என்னவென்றே அறிந்து கொள்ளாமல் அழிந்து கொண்டிருக்கும் சாதி முத்தரையர் சாதி.
வரலாற்றுப் பெருமையை வானளவு கொண்டுள்ள நாம் இனி ஒருபோதும் மண்டியிடக்கூடாது, முத்தரையர்களின் வரலாறு என்பது முத்தரையர்களால் எழுதப்பட்டது கிடையாது, நடுவுநிலை கொண்ட நல்லவர்களால் எழுதப்பட்டது, அதுதான் நம் பலம், எந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு இது நாள் வரை நம்மை சில பேர் அடக்கிவைத்திருந்தார்களோ அதே அதிகாரத்தை நாம் மீட்டெடுப்போம்….! அரசியல் சக்தியாக அவதரிப்போம்…!! அதிகாரத்தை மீட்டெடுப்போம்...!!!
மண் ஆண்ட முத்தரையர் வம்சம் மீண்டு(ம் ) நாடாளப் புறப்படுவோம்....! இறக்கிய சிங்கக்கொடியை மீண்டும் ஏற்றிடுவோம், எந்த மண்ணிலே நாம் பெரும்பான்மையோ அந்தமண் நமக்குரியது, ஆதிக்கம் செய்வது நம் நோக்கமல்ல அதிகாரத்தை கைப்பற்றுவதே நம் நோக்கம் அய்யா வெங்கடாசலனார், அண்ணன் நேரு போன்றோரின் உயிர் எந்த ஏக்கத்தில் பிரிந்ததோ, அந்த ஏக்கத்தை இனியும் நாம் வளரவிடல் கூடாது, நாம் சாதிய ஆதிக்கத்தை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது, ஆதரிப்பதும் கிடையாது, ஆனால் நம்மை அடக்கி அடுத்தவர்கள் நம்மை ஆதிக்கம் செய்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது, நாம் முத்தரையையும் வென்றாண்ட வீர முத்தரையர் வம்சம்…!! கட்டற்ற வீரம் கொண்ட வீரக்களப்பிற வம்சம்..!!! நம் இன விடுதலை நோக்கி,இப்போதே புறப்படுவோம்... !!!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரைதான் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள், இனி நம் பயணம் அரசியல் அதிகாரத்தை நோக்கியதாக அமையட்டும், அரசியல் அதிகாரம் அது ஒன்றே நம் இலக்கு...!!!!
மறந்து விடாதீர்கள் நாம் முத்தரை வென்றாண்ட வீரக் களப்பிர வம்சம்...!!!!
எழுத்து : துரை. ராஜகுமாரன் வடகாடு
தாங்களின் மகத்தான பணி தொடரட்டும்,,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.