விருதுநகர் மாவட்டம்
மல்லாங்கிணறில் உள்ள நாகமலை சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு காவல்துறை
அனுமதி மறுத்துள்ளதால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மல்லாங்கிணறில்
முத்தரையர் சமுதாயத்தினருக்குச் சொந்தமான நாகமலை சுவாமி திருக்கோயில் உள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் தற்போது புணரமைப்புப் பணிகள்
செய்யப்பட்டு வருகின்ற 8ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகள்
தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த
நிலையில் கும்பாபிஷேகம் நடத்த முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை தற்போது
கும்பாபிஷேகம் நடைபெற தடை விதித்துள்ளது.
கும்பாபிஷேகம் நடைபெற்றால் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படும் என்பதால்
கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெற
மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக