பொன்னமராவதி
அருகே உள்ள தொட்டியம்பட்டியில் அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சனி
மற்றும் ஞாயிறுக்கிழமை கபடிப்போட்டி நடைபெற்றது.
தொட்டியம்பட்டி
ஏஎஸ்கே கபடிக்குழுவும்,ஊர்பொதுமக்களும் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர்
கபடிக்கழக அனுமதியுடன் நடத்திய இப்போட்டிக்கு ஊர் முக்கியஸ்தர் அ. அடைக்கன் தலைமை
வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயந்திவிஜயகுமார்,சி. ராஜூ ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில்
தஞ்சை எம்ஜே பிரதர்ஸ், சீகம்பட்டி வெண்புறா,மதுரை இடையபட்டி சில்வர் மவுண்டைன்,
சிங்கம்புணரி கூத்தாடி அம்மன், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் பூசாரிபட்டி, நத்தம்
வேலாயுதம்பட்டி என்ஐபி அணி உள்ளிட்ட 24 அணியினர் பங்கேற்றனர்.
இதில்
முதல்பரிசை பெருமாநாடு இணைந்த கைகள் அணியினரும், இரண்டாம் பரிசை டி. புதுப்பட்டி
தேவேந்திரர் வளர்பிறை அணியினரும், மூன்றாம் பரிசை தொட்டியம்பட்டி
அழகியநாச்சியம்மன் அணியினரும், நான்காம் பரிசை காளாப்பூர் விவிஎஸ் அணியினரும்
பெற்றனர்.
வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை திமுக ஒன்றிய செயலர் சி. ராஜூ,
மேலைச்சிவபுரி பாரதி கலை மன்ற நிர்வாகிகள், வலையபட்டி அழகு அய்யப்பன், பொன்னமராவதி
டி. ஆனந்த் உள்ளிட்டோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஏஎஸ்கே கபடிக்குழு
தலைவர் எஎல். ராஜேந்திரன், எஎல். கருத்தான்,எ. ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள்
செய்திருந்தனர்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக