திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நீலகிரி முத்தரையர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் மனு

நீலகிரி முத்தரையர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனு:கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; 3 மொழிகளில் கல்வி போதிக்கப்படுகின்றன. தேயிலை தோட்ட, கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கின்றனர். பள்ளி தலைமையாசி ரியர், 11,12ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூலிக்கிறார். ஆசிரியர்களை நியமனம் செய்து, சம்பளம் வழங்கு வதற்காக தான் தொகை வசூலிப்பதாக அவர் கூறுகிறார். காசோலை மோசடி வழக்கில் தொடர்புடையவரை பி.டி.., நிர்வாகத்தில் பொரு ளாளராக வைத்துள்ளார். மதமாற்ற செயல்களிலும், தலைமையாசிரியர் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர். இதில், 500க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக