செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் முத்தரையர் முன்னேற்ற சங்கம் மனு

தஞ்சாவூர்,
ஒரத்தநாடு அருகே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு குளம் ஆக்கிரமிப்பு
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரத்தநாடு தாலுகா பொய்யுண்டார் கோட்டை ஊராட்சி பிலாவடித்தெருவை சேர்ந்த தஞ்சை மாவட்ட முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகையன், செயலாளர் ஆறுமுகம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
ஒரத்தநாடு தாலுகா பொய்யுண்டார் கோட்டை கிராமத்தில் 4 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் பில்லா குளம் உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த குளத்தை ஆக்கிரமித்து சிலர் பட்டாவாக மாற்றி விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே கலெக்டர், இந்த பட்டாவை ரத்து செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கவும், பில்லா குளத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

 News Source : DINATHANTHI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக