வியாழன், 19 செப்டம்பர், 2013

முத்தரையர் கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா - மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அழைப்பு...!!!

அன்பு உறவுகளே வருகின்ற அக்டோபர் 2ம்நாள் (02/10/2013)திருச்சி புத்தூர் நால் ரோடு சண்முக திருமணமண்டபத்தில் முத்தரையர் கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா நடக்க இருக்கின்றது. மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும் அவ்விழாவில் அய்யா ஆர் வி அவர்கள் வாழ்த்துரை வழங்க திரு கு.ப.கணேசன் திரு ராஜசேகரன் ப்ரின்ஸ் தங்கவேல் திரு மொ.பழனியாண்டி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது முதுபெரும் முத்தரையர் சான்றோர் விருது முத்தரையர் இனப்பணி ஏந்தல் விருது முத்தரையர் மலரும் சாதனையாளர் விருது என பல விருது களை வழங்கி இனப்பெருமையை நிலைநாட்ட இருக்கின்றனர்.முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊக்கப்பரிசும் சான்றிதழும் பெற இருக்கின்றனர்.உறவுகள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகபடுத்த வேண்டுகிறோம் 
-வரவை நாடும் உறவு
லோகநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக