தொழில்நகரமாக விளங்கி வரும் கரூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
தொழில்நகரமாக விளங்கி வரும் கரூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
பொதுமக்களின் நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கரூர் பேருந்து நிலையத்துக்குப் பதிலாக, புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். மாவட்ட சங்கத் தேர்தலை கரூரில் அக்டோபர் 6-ம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அமைப்புத் தலைவர் ஆர். வெங்கட் தலைமை வகித்தார். அமைப்புக் குழு பொறுப்பாளர்கள் தீரன் அறிவழகன், ராமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேலாயுதம், விசுவநாதன், மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைப்புக் குழுச் செயலர் எஸ். சபரீசன் வரவேற்றார். பி. ராமமூர்த்தி நன்றி கூறினார்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக