குருபூஜைக்கு தடை....!?
நேற்றைய தினம் (22/10/2013) நேர்பட பேசு என்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு.மனுஷ்யபுத்திரன் விவாதத்தின் இடையில் ஒரு கருத்தை சொன்னார் "பெரும்பாலான சாதிய கலவரங்களின் போது காவல்துறை சாதிய உணர்வோடு செயல்படுகிறது அதனை தடுக்க குறைந்த பட்சம் அனைத்து சமூகத்திற்க்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்" என்பது அந்த கருத்து, உண்மைதான் இது காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து அரசுதுறைகளிலும், அதிகார மட்டத்திலும் இத்தகைய உணர்வு இருக்கிறது அதனால்தான் நாமும் அனைவருக்கும் இடஒதுக்கீடு (100 % இடஒதுக்கீடு) என்பதனை வலியுறுத்தி வருகிறோம், இதற்காகதான் சாதிரீதியான சரியான கணக்கெடுப்பினை நடத்தி அனைத்து சமூகத்திற்க்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதால் மட்டும்தான் சில சாதிகளின் ஆதிக்கத்தினை குறைக்க முடியும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முடியும்.
மேலும் பொதுவாக சாதிகளுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் சொல்லிவந்த மனுஷ்யபுத்திரன் நேற்றைய விவாத நிகழ்ச்சியில் அதிசயமாக சாதிதலைவர்களின் குருபூஜை போன்ற விழாக்களை தடை செய்யக்கூடாது என்றும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து
இந்த விவாத நிகழ்ச்சியில் தொடர்பே இல்லாமல் எங்கள் "பேரரசர் பெரும்பிடுகு
முத்தரையரின்" பெயரை வலிந்து திணிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.குணசேகரன்
முயன்று, முத்தரையர் என்ற பெயரை சரியாக உச்சரிக்கக்கூட முடியாமல் போனதை
கான முடிந்தது. (காரணம் எங்களால் எங்கும் எந்த கலவரமும்
நடந்திருக்கவில்லை... பெயர் சொல்லும் அளவிற்க்கு அல்லது ஞாபகத்தில்
இருக்கும் அளவிற்க்குக் கூட சிறு அசம்பாவிதமும் இல்லாமல்தான்
ஆண்டாண்டுகாலமாக எங்கள் பேரரசரின் பிறந்த நாளினை கொண்டாடுகிறோம்)
முறைப்படுத்துங்கள், ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளை விதியுங்கள், அமைதியாக அவரவருக்கு விருப்பமான முறையில் அடுத்தவருக்கு தொல்லை இல்லாமல் குருபூஜைகளை கொண்டாடுங்கள் என்பதை நாமும் வலியுறுத்துகிறோம்.
- சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக