திருச்சி, : பெரும் பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2011 மே மாதம் 23ம் தேதி திருச்சியில் நடந்தது. பல்வேறு அரசி யல் கட்சியினர் ஒத்தக்கடையில் உள்ள முத்தரையரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முத்தரை யர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணி விப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஊர் வலம் நடந்தது. அப்போது ஊர் வலம் சென்ற பகுதி யில் ஏற்பட்ட கலவரத்தில் சத்தி ரம், காந்தி மார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட் பகுதியில் பொது மக்கள் பலர் காயமுற்றதா கவும், அரசு மற்றும் தனி யார் பஸ்கள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் காந்தி மார்க் கெட் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதன் உள்பட 57 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2வது கூடுதல் சார்பு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடி வுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதி பதி விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தமிழ் நாடு முத்தரையர் முன் னேற்ற சங்க மாநில தலை வர் விஸ்வநாதன் உள்பட 57 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக