பெண்ணியம்...
கடந்த வாரத்தில் விஜய் டீவியின் " நீயா நானா" நிகழ்ச்சியில் தொடங்கி இன்றைய முக நூலின் பரபரப்பான விவாதமாக மாறி இருப்பது "பெண்ணியம்"
எது பெண்ணியம் ? என்பதற்க்கு சரியான, ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம் இல்லாமல் ஒரு கருத்து திணிப்பு முயற்சியாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்ணியம் என்பதற்க்கான புரிதல் இல்லாமல் தாந்தோன்றிதனமான அல்லது தாங்கள் வாழ்விலிருந்து விடை தேடும் முயற்சியை பலரும் கையாண்டார்கள் என்பது கண்கூடு
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து, உபசரித்து, தனது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்ற குடும்ப பெண்களை பார்த்து "பரிதாபப்படுகிறேன்" என்று பரிதாபமாக சொல்கிறார் பிரபலமான கவிஞர். இதில் பரிதாபப்பட என்ன இருக்கிறது ? ஒரு பெண் சொல்வதனால் வந்த பரிதாபமாக இது இருந்தால், இதே கருத்தை வெளியில் சொல்லாமல் விட்டுக்கொடுத்து, உபசரித்து தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளுவது ஆணின் வழக்கமாக இருக்கிறது ? பொதுவெளியில் சொல்லுதல்/ மறைத்தல் என்பதால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சமூகத்தில் பரிதாபப்பட வேண்டிய தேவை ஏன் எழுகிறது ? தன்னுடைய இயலாமையை அவ்வாறு அவர் வெளிப்படுத்தினார் என்றே நான் கருதுகிறேன், அதற்க்கு பெண்ணியம் என்ற பெயர் சூட்டுவது எப்படி சரியாகும் ?
பெண்ணியம் பேசுபவர்களுக்குள்ளாகவே புரிதல் இல்லை என்பது எனது கருத்து,
பெரும்பாலான பெண்ணியவாதிகளின் எடுத்துக்காட்டுகளில் அதிகம் ஒலித்தது
பெரியார் எனும் ராமசாமி நாயக்கரின் கருத்துக்கள், ஒருவர் கூட அவரிடம் பிழை
காண விரும்பவில்லை, அவரே சொல்கிறார் என்பதாகதான் கருத்தை
எடுத்துக்கொள்கிறார்கள், 13 வயதில் தனது குடும்பத்தில் விருப்பத்திற்க்காக
திருமணம் செய்தவர், 90 வயதில் தன்னை பராமரிப்பதற்க்காக இன்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்தவரின் வாழ்வியல் முரண்பாடு இங்கு யாராலும் விவாதிக்கப்படக் கூட இல்லை..!!
பெண்ணடிமைதனத்தின் அடையாளமாக இருக்கும் கற்பபையை எடுத்துவிட வேண்டும் என்ற ராமசாமி நாயக்கர், 90 வயதில் தனது தேவைக்காக, தன்னை பராமரிப்பதற்க்காக ஒரு திருமணம் செய்தது சரியா ? சரி அதுகூட அவரின் சொந்த வாழ்வாக இருந்துவிட்டு போகட்டும் ஏன் அவர் தாலி கட்டிக்கொள்ளவில்லை ? சரி அதுகூட போகட்டும் ஏன் பெரியார் மணியம்மையை திருமணம் செய்தார் என்று சொல்லவேண்டும் ? "மணியம்மை தாலிக்கட்டி பெரியாரை மணம்புரிந்தார்" என்று எங்காவது சொல்லக் கேட்டதுண்டா ? இதுபோன்ற கேள்விகள் யாருக்கும் எழுவதே இல்லை...
பெண்ணியம் பேசுபவர்களில் பலரும் இயல்பான வாழ்க்கையை வாழும் ஆசையோடு, எதோ ஒரு கட்டத்தில் அது நிராகரிப்பட்டோ அல்லது உதாசினப்படுத்தப்பட்டோ விடும்போது அதிலிருந்து விடுபட தங்களை மறைத்துக்கொண்டு வாழ "பெண்ணியம்" பேசுகிறார்கள்,
இன்னும் ஒரு பத்திரிக்கையாளர் தன்னுடைய எல்லா கருத்துகளிலும் சாதியை தொடாமல் கருத்தே சொல்வது இல்லை, சாதியால் அவர் எங்கோ பாதிப்பினை அடைந்து இருக்கலாம் அதற்க்காக அது தொடர்பற்ற எல்லா விசயங்களிலும் அதனையும் ஒரு விசயமாக திணிப்பது அப்பட்டமான சுயநலம்,
பெண்களுக்கான உரிமை உலகம் முழுவதும் மறுக்கப்படுகிறது என்பது
உண்மையானால்.. இதில் மதம், இனம், மொழி, சாதி என்ற பிரிவு எங்கிருந்து
வருகிறது ? பிறகு ஏன் ஏனைய காரணிகளை விட்டுவிட்டு "சாதியை" மட்டும் சாட
வேண்டும் ?
ஒரு பெண் தன்னுடைய தேவை எது என்பதை அவள்தான் தீர்மாணிக்கிறாள், அந்த தேவை நிறைவேற்றப்பட சிலரின் ஒத்துழைப்பும், அனுசரிப்பும் அவசியமாக இருக்கலாம் (இல்லாமலும் இருக்கலாம்), ஆனால் தேவை என்பது அவளின் முடிவு, இன்னும்
பெண் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்து மட்டுமே சமூகத்தை காண
முற்படுகிறாள், அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை... பெண்ணால் செய்ய
முடியாத விசயம் / வேலை என்று எதுவும் இல்லை... ஆனால் தான் எதை செய்வது
தனக்கு தொந்தரவு இருக்காதோ, சராசரியான வாழ்வில் சிக்கல் ஏற்படாதோ அந்த
வேலையை, விசயத்தை அவள் தேர்ந்தெடுப்பது அவளின் விருப்பம் சார்ந்ததுதானே
தவிர சமூகத்தின் தவறு அல்ல...
சமூகம்
என்பதை இவர்கள் (பெண்ணியவாதிகள்) வேறு எதோவாக காட்ட முயல்கிறார்கள் சமூகம்
என்பது ஆணும், பெண்ணும் இணைந்ததுதானே.. ? பிறகு ஏன் குழப்பம்.. ?
ஒரு பெண்ணால் முடியாத விசயமே இல்லை எனும்போது, சமூகம் என்பதில் தாங்களும் உண்டு எனும்போது யாருடைய அனுமதிக்காக இவர்கள் போராட நினைக்கிறார்கள் ? ஒரு பெண்ணால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் இது நிதர்சனம், இதில் புரட்சி பேசுவதெல்லாம் வேசம் மட்டும்தான், மேலும் ஒரு பெண் நேரிடையாக ஒரு விசயத்தில் ஈடுபடுவதைவிட, யாரையோ முன்னிலைப் படுத்தி அதன் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக பங்கெடுப்பதுதான் அவளுடைய நலனுக்கு உகந்தது என்றால் அப்படியே இருக்கட்டுமே....
இதில்
நான் பெண்ணியம் பேசுபவர்களை குறைத்து மதிப்பிட்டதாக கருத வேண்டாம், இந்த
கோணத்திலும் உங்கள் பார்வை இருக்கட்டும் என்பதுதான் எனது விருப்பம்
கல்வி, பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் பெண்களுக்கு அவசியம் என்பதில் நான் என்றும் மாறுபடவில்லை...!! ஆனால் அது குடும்ப, சமூக அமைப்பை சீர்குலைத்து வேண்டாம் என்பது எனது கருத்து..!!!
- சஞ்சய் காந்தி அம்பலகாரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக