முத்தரையர் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீத இட
ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூர்
மாவட்ட தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கரூரில் அண்மையி்ல்
நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத்தலைவர் சபரீசன், செயலர் வெங்கட்
ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலை
வகித்தனர். மாவட்ட தணிக்கையாளர் ரெங்கசாமி வரவேற்றார். துணைத்தலைவர் ஆனந்த்
நன்றி கூறினார்.
கூட்டத்தில் முத்தரையர் இன மக்களுக்கு கல்வி,
வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். இலங்கையில்
நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற
வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவி்ப்பது,
மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையேயான பாலத்தை விரைவில் கட்டி முடிக்க
வேண்டும். அய்யர்மலையில் ரோப்கார் திட்டத்தை போர்க்கால அடிப்படையில்
நிறைவேற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர், பெரம்பலூர்
தொகுதியை முத்தரையர்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொள்வது என்பன போன்ற
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News Source : DINAMANI
கரூர், : தமிழ்நாடு முத்தரையர் சங்க கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்
கூட்டம் மாவட்ட தலைவர் சபரீசன், செயலாளர் வெங்கட் தலைமையில் நடைபெற்றது.
குமரேசன், சண்முகம், மாரிமுத்து, பழனிச்சாமி, குலோத்துங்கன்,
கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தனர். ரெங்கசாமி, ஆனந்த் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முத்தரையர் இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்ற துறைகளில் 15சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, மேலைப்பாளையம், கோயம்பள்ளி இடையேயான பாலத்தை கட்டுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது, அய்யர் மலையில் செயல்படுத்தப்படவுள்ள ரோப்கார் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அரசைக் கேட்டுக்கொள்வது, வரும் மக்களவை தேர்தலில் சமுதாயத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒன்றான கரூர், பெரம்பலூர் தொகுதிகளை சமுதாயத்தினருக்கு ஒதுக்க கேட்டுக்கொள்வது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக