சாதி துவேசத்தை வளர்த்துவிடும் அரசு...!!
கடந்த வாரம்
புதிதாக யாரேனும் தஞ்சாவூருக்கு வந்திருந்தால், நேரடியாக தானே
கீழ்பாக்கம் அரசு
மன நல காப்பகத்தில் போய் சேர்ந்திருப்பார்,
ராஜராஜசோழ தேவன்,
ராஜராஜசோழ உடையார்,
ராஜராஜசோழ பள்ளர்,
ராஜராஜசோழ வன்னியர்
(இதில் விடுபட்ட சாதியினர் மன்னிக்கவும்..!?) என்று தஞ்சாவூரே கிறுகிறுத்தது, ராஜராஜன் எந்த சாதி என்பதல்ல இப்போது பிரச்சனை...! இப்போது போஸ்டர் அளவில் இருக்கும் பிரச்சனை வளர்ந்து "சாதி மோதலாக" மாறினால் இதுவரை தஞ்சாவூரில் பெரிய அளவில் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசல் புரசலாக இருக்கும் சாதி மோதல்களை ஊதிப்பெரிதாக்கி அரசியல் ஆதயம் அடையும் நோக்கில் அரசு இந்த பிரச்சனையில் பாராமுகமாக இருக்கிறதோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது
இந்த சாதியினர் யாரும் அவ்வளவு உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த போஸ்டர் யுத்தம் நடத்தவில்லை..! ராஜராஜனுக்கு இருக்கும் பட்டங்கள் அடிப்படையில் அவர் பல சாதிகளுக்கும் சொந்தம் ஆகிவிட்டார், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு "கள்வர கள்வன்" என்ற பட்டம் உள்ளதால் "முத்தரையரை" சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் போன்றே இதுவும் ஆதாரங்களை கடந்த "சொந்தங்கள்"
இதனை இனியும் அரசு வேடிக்கை பார்பது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும், ஒன்று ராஜராஜனுக்கு சதயவிழா என்று
அர்த்தமற்ற விழாவினை நிறுத்த வேண்டும் அல்லது குழப்பமான வரலாற்றினை சரி
செய்ய வேண்டும்,போஸ்டர் யுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இதையெல்லாம் இப்போதே செய்ய வேன்டும் "தும்பை விட்டு
வாலை பிடிக்கலாம்" என்று காத்திருந்தால் தென் மாவட்டங்களைப் போன்றே எப்போதும் பதற்றமான பகுதியாக தஞ்சையும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது, ஒருவேளை அதுதான் அரசுக்கு வேண்டுமோ என்னவோ தெரியவில்லை...! ராஜராஜனை சொந்தம் கொண்டாடும் இந்த சாதிய அமைப்புகள் வெளிப்படையான விவாதங்களை தங்களுக்குள் செய்ய முன்வர வேண்டும், அரசும் திறந்த மனதுடன் தெளிவான வரலாற்றினை ஆராய முயல வேண்டும் அதுவே சரியான தீர்வினை தரும்..!!
-சஞ்சய்காந்தி அம்பலகாரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக