வெள்ளி, 1 நவம்பர், 2013

திக்கிமுக்காட வைத்த திருச்சி உறவுகள்...!!!



திக்கிமுக்காட வைத்த திருச்சி உறவுகள்...!!!


































 நேற்றைய தினம் அறிவித்தது போலவே திருச்சியை நோக்கி இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் பயணம் திருச்சி நண்பர்களின் ஒத்துழைப்போடு மிக இனிதாக வெற்றிகரமாக அமைந்தது இந்த பயணம் சிறப்பாக அமைய பெரும் உதவிகளை செய்த திருச்சி நண்பர்கள் திரு.ஏர்போர்ட் பிரகதீஸ், திரு.ஏர்போர்ட் ஹரி, மற்றும் என்றென்றும் எனது பாசத்திற்க்கு உரிய தம்பிகள் திரு. பாலமுருகன், திரு. சிவா, திரு. ராஜதேவா முத்தரையர் ஆகியோருக்கும், தங்களின் பொன்னான நேரத்தினை ஒதுக்கி எங்களை சந்தித்த சமூகத் தலைவர்கள் மரியாதைக்குறிய திரு. கே.கே.செல்வகுமார் (வீர முத்தரையர் சங்க தலைவர்) , மரியாதைக்குறிய திரு. மரு.பாஸ்கரன் (பொதுச்செயலாளர், தமிழ் நாடு முத்தரையர் சங்கம்) ஆகியோருக்கும், தவிர்க்க முடியாத காரணத்தால் சந்திக்க முடியாமல் போனாலும் தானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தமுறை நிச்சயமாக சந்திப்போம் என்று உறுதியளித்த எதிர்கால முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திரு.ஆர்.வி.பாலமுருகன் அவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக பயணம் சிறக்க உதவிகளை செய்த தம்பி துரை.ராஜகுமரனுக்கும்  பேரரசருக்கு மரியாதை செலுத்த அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு சந்திக்க காத்திருந்த நண்பர்களில் சிலரை நேரமின்மையின் காரணமாக சந்திக்க முடியாமல் போனதால் அந்த உறவினர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

பொதுவாக நம் சமூகத்து பெண்கள் குடும்ப பொறுப்போடும், கல்வியில் சிறந்தும் இருந்தாலும் இனம் தொடர்பாக தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும், உணர்வும் குறைவாக கொண்டு இருப்பதாக நான் கருதியதை பொய்யாக்கி இனம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும், உணர்வும் கொண்டிருந்த ஒரு இளம் வயது சகோதரியை சந்தித்தது இந்த பயணத்தின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

எனது லட்சியமாக இருந்த எனது முப்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை தொட்டு தரிசித்து, அவரின் ஆசியை பெற்றதை எனக்கு கிடைத்த பெரும்பேராக கருதுகிறேன், எனது முப்பாட்டனின் ஆசியோடு எனது வாழ் நாள் முழுவதும் இந்த சமூகத்திற்க்காக எனது பணியை தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதி கூறுகிறேன்.

என்னோடு இந்த பயணத்தில் இணைந்த திரு. சுரேந்திரன், திரு. மணிகண்டன், திரு.பாலமுருகன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

தலைவர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக விரிவான பதிவினை விரைவில் தருகிறேன்.

 நன்றியுடன்..
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக