செவ்வாய், 5 நவம்பர், 2013

முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம்


திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்க, திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவராஜ் வரவேற்றார். செல்லாண்டி, பெரியகோபால், தங்கவேல், இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன், வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
முத்துராஜா, அம்பலக்காரர், வலையர், சருகுவலையர், செட்டிநாட்டு வலையர், கண்ணப்ப குல வலையர், பரதவவலையர், அரையர், முத்தரையர், மீனவர், பர்வதராஜகுலத்தவர்களின் பிரதிநிதிகள் மாநாடு, வரும் நவம்பர், 10ம் தேதி திருச்சியில் நடத்த வேண்டும்.

திருச்சியில் தேசிய சட்டப்பள்ளி, மகளிர் தோட்டக் கலை கல்லூரி, காகித தொழிற்சாலை, புதிய பாலங்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி.

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலை துணைவேந்தர் பதவியில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க, உயர்மட்ட ஆலோசனை குழுவின் கிளையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source From : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக