ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அறச்சீற்றம்


எங்கோ வடக்கே ஒரு பாலியல் வன்முறை நடந்துவிட்டால் பொங்கி எழுந்துவரும் புண்ணாக்கு முற்போக்குவாதிகள் கடந்த சில நாட்களாய் காணாமல் போனதன் மர்மம் என்னவோ ? காரைக்கால் மட்டும் இவர்கள் கண்ணில் இருந்து தப்பியதேனோ ? எப்பவுமே பொங்கி பெருக்கெடுக்கும் சமூக அக்கறைக் கொண்ட சவுக்கு, வினவு, கீற்று இணையதளமெல்லாம் முடங்கி கிடக்கும் மர்மம் என்னவோ ?  பெரும்பாலான முற்போக்குவாதிகளும், பத்திரிக்கைகாரர்களும் இப்படி ஒரு வன்முறையை செய்தவர்களை கண்டிப்பதற்க்கும் மேலாக அவர்களுக்கு நோகாமல் இருக்கும்படியான ஒரு விளக்கத்தை தந்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அதாவது "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" நேரடியாக சொல்லவேண்டுமானால் இதுதான் "பச்சை அயோக்கியதனம்"

இந்த பிரச்சனையை அறிந்தபோது வராத சமூக அக்கறை, இதில் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்ட ஒரு சாதியையும், மதத்தையும் குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்க்காக ஒரு தரப்பு பிரச்சனை வெளிக்கொண்டு வரும்போது மட்டும் (இதில் இவர்களுடைய அசிங்க அரசியல் இருந்தாலும் இவர்களால்தான் இது வெளியில் வந்தது என்பதையும் மறுப்பதற்கு இல்லை..), அந்த பெண்ணின் மீதான அக்கறையினாலோ, சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையாலோ அல்லாமல் எங்கே தங்களுக்கு வேண்டப்பட்ட சாதியும், மதமும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த அயோக்கிய முற்போக்குவாதிகளின் "சமூக அக்கறை" மிகுந்த குரல்...

இவர்களாவது ஒரு பக்கம் இருக்கட்டும், திருட்டு திராவிடத்தின் எச்சம், காரைக்கால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அயோக்கியர்களின் அண்ணன் திரு. என்.எம்.எச். நாசிம் உதிர்த்த திராவிட பொன்மொழி நடந்தது ஒரு "விபச்சாரம்" என்று, இவனைப்போன்ற அயோக்கியனை சட்டமன்றம் அனுப்பிய மக்களை குறை சொல்வதா ? கட்சியை குறை சொல்வதா ?  அதற்க்கும் மேலாக “இது மன அழுத்தத்தினால் நடந்திருக்கிறது அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும்” என்பது, யாருக்கு மன அழுத்தம் குடித்துவிட்டு கூடி கும்மாளமிட்ட அயோக்கியர்களுக்கா.. ? வலியில் துடித்துப்போன அந்த சகோதரிக்கா.. ?? அல்லது உன்னைப்போன்ற அயோக்கியனுக்கா..???

இங்கே தமிழத்தின் ஒரு பெண்ணுக்கு அவமானமும், அநீதியும் நடந்திருக்கும்போது ஓடி உதவியிருக்க வேண்டிய தமிழகஅரசு "கோடநாட்டில்" ஓய்வில் இருக்கிறது, எங்கே பாதுகாப்பு ? எப்போது கிடைக்கும் பெண்களுக்கான சுதந்திரம் ? இதில் வெக்கமில்லாமல் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் ஒரு கூட்டமும், கயவர்களைக் காப்பற்ற நினைக்கும் ஒரு கூட்டமும் அசிங்க அரசியல் நடத்துகிறது... அதுவும் தீர்விற்க்காக இல்லை, தங்கள் அறிப்பை தீர்த்துக் கொள்வதற்காக... இது இந்த அசிங்கத்தை செய்த இழிப்பிறவிகளைவிட கேவலமானது. தீர்க்கமான முடிவுகள் வேண்டும், சகோதரிகளே தீரமான விவேகமும் வேண்டும், அசிங்கங்களிடம் மாட்டிகொண்டு எங்கே சுதந்திரம் ? என்று முழங்குவதைவிட, எது சாத்தியமோ ? எது உங்களுக்கு பாதுகாப்போ ? அதை செய்யுங்கள்.

### "அருமை சகோதரிகளே இந்த உலகில் வாழும் எல்லோரையும்விட அதிகமான உரிமையும், சுதந்திரமும் உங்களுக்குஉண்டு, நீங்கள் அயோக்கியர்களின் கையில் சிக்கும்வரை...,"

-     சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக