என் மனதுக்குள் வைத்து பூசித்து வந்த எனதருமை அய்யா திரு. நம்மாழ்வாரை
எங்கே போய்விடப்போகிறார் என்று கைகெட்டும் தூரத்தில் இருந்தும் காணாமலே இருந்த எனக்கு
இன்று வெறுமை மட்டுமே மிச்சமாக இருக்கிறது, பார்க்க முடியாத தூரம் போய்விட்டாலும் எம்
நினைவோடு வாழ்கிறார், எம் எண்ணங்களோடு வாழ்கின்றார். தன் கடைசி மூச்சைக்கூட இந்த கவலையற்ற
தமிழ் சமூகத்திற்க்கும், மண்ணுக்கும் அளித்துவிட்டு நிம்மதியாய் போய்விட்டார், தன்
இரத்தத்தை உரிஞ்சினாலே ஏன் என்று கேட்காத தமிழ்சமூகத்திடம், உன் நிலத்தில் "மீத்தேனை"
உரிஞ்சவிடாதே என்று வீடு வீடாய், வீதி வீதியாய் போய் உடம்பை கெடுத்துக் கொண்டு தமிழன்
உடம்பும், மண்ணும் கெட்டுவிடக்கூடாது என்ற ஆதங்கம் கொள்கிறார் எதுவும் விலையாத பாறை
நிறைந்த ஒரு பாலையை "கானகமாக்கி" காட்டினார், உயிர் உரம் போட்டாரே தவிர உயிர்
பறிக்கும் இரசாயனம் போடவில்லை...போடவிடவும் இல்லை, கடைசியில் தன் உயிரையும் உரமாக்கிவிட்டு
போய்விட்டார்.
அய்யா நீண்டு செல்லும் உம் வழியில் எவ்வளவு தூரம் என்று தெரியாது அது
சில அடிகளாக இருந்தாலும் நடந்தே மறிவேன் என்று சொல்லி உன்னை இறுதியாய் அனுப்பி வைக்கிறேன்.
துக்கத்துடன்..
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக