Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 10 டிசம்பர், 2014

காவிரியில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு: டெல்டா மாவட்டங்களில் பஸ், ரெயில் மறியல் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் உட்பட‌ ஆயிரக்கணக்கானோர் கைது

காவிரியில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் பஸ், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
அணை கட்ட எதிர்ப்பு
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணைகள் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தற்போது வரும் உபரிநீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் பாலைவனமாகும் நிலை உருவாகும். கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.
ரெயில் மறியல்
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி கட்சி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெயில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 310 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் 6 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 89 இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் மொத்தம் 3,903 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை தோணித்துறை ரோடு ரெயில்வே கேட் அருகே தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில், கம்யூனிஸ்டு கட்சிகள், விவசாயிகள், விவசாய சங்கங்கள் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகை மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் ரெயில் மறியலும், 37 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட 5,632 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியலும், 60 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.மா.கா. மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. மறியலில் ஈடுபட்ட 697 பெண்கள் உள்பட 5,245 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 1,285 பெண்கள் உள்பட 14,199 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் போராட்டம்
ரெயில் மறியல் போராட்டத்துக்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு இருந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு தலைமையில் அவர்கள் ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தொடர்ந்து ரெயில் மறியலுக்காக ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ரெயில் நிலையத்திற்குள் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அதேபோல காட்டுமன்னார் கோவிலில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டங்களில் சுமார் 270 பேர் கைதானார்கள்.

News Source : http://www.worldtamils.com/?p=132592

மறைந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன்.. மதிப்புமிகு M.R.கோவேந்தன்

மறைந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன்.. மதிப்புமிகு M.R.கோவேந்தன்






தமிழக அமைச்சரவையில் முத்தரையர் சமூகத்தின் முதல் பிரதிநிதி இவர்தான்

தமிழக அமைச்சரவையில் முத்தரையர் சமூகத்தின் முதல் பிரதிநிதி இவர்தான்

முன்னாள் பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திருமிகு.M.R. கோவேந்தன் அவர்கள்

புகைப்பட உதவி : கழனிவாசல் முத்தரையர் சிங்கம்


செவ்வாய், 25 நவம்பர், 2014

பாலமேட்டில் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி விழா

பாலமேடு : பாலமேட்டில் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி விழா நடந்தது.ஒன்றிய தலைவர் சின்னக்காளை தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தனர். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணைத் தலைவர் நாராயணன், நிர்வாகிகள் மகேந்திரன், மாயழகன், தனசேகரன், பெரிச்சி வழங்கினர். நிர்வாகி ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.

News Source : DINAMALAR

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் : முத்தரையர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, : முத்தரையரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தஞ்சையில் நடந்த மண் டல நிர்வாகிகள் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் 5 மாவட்டங்களின் மண்டல நிர்வாகிகள் கூட் டம் தஞ்சையில் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முருகையன் வரவேற்றார். மண்டல செய லாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை. இதை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு 2 தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்வதை கண்டிப்பது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சையை ஆட்சி செய்த இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்ற சுவரன்மாறன் மன்னருக்கு மாநில அரசு நினைவு சின்னம், மணிமண்டபம் அமைக்க வேண்டும். சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் காலங்களில் முத்தரைய ருக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பாலமுருகன், மாநில அமைப்பு செயலாளர் நாராயண சாமி, பொதுச் செயலாளர் முருகேசன், இலக்கிய அணி செயலாளர் வீரசங்கர், இளைஞர் அணி செயலாளர் தீரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகே சன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பாலாஜி, தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News Source : DINAKARAN

திங்கள், 17 நவம்பர், 2014

ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6


ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6
கோகுல் சேஷாத்ரி
முத்தரையர் திருக்கோயில்களில் பாதச் சிற்பங்கள்


காவிரிப் படுகைப் பகுதிகளான தஞ்சை-திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள பண்டைய கற்றளிகள் சில முத்தரையர் காலத்துக் கட்டுமானங்களாக முந்தைய ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பனங்குடி, விசலூர், காளியாப்பட்டி, விரலூர், செந்தலை, நியமம், நார்த்தாமலை முதலான சிற்றூர்களில் அமைந்துள்ள இத்தளிகள் சிலவற்றில் முதன் முறையாக கண்ட - வேதி பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் செதுக்கும் மரபைக் காணமுடிகிறது.

குடைவரைகள், ஒரு கல் தளிகள், கற்றளிகள் என்று மூவகைகளில் திருக்கோயில்கள் அமைத்துப் பெருமை கொண்ட பல்லவச் சிற்பிகளின் கட்டுமானங்கள் எவற்றிலும் காணப்படாத இந்தப் புதிய கலை மரபு தமிழ்நாட்டளவில் முதன்முறையாக அறிமுகமாவது முத்தரையர் காலக் கட்டுமானங்களாக அடையாளப்படுத்தப்படும் திருக்கோயில்கள் சிலவற்றில்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.


செந்தலை விமானம்


இவ்வாறு பாதச் சிற்பங்கள் பெற்ற முத்தரையர் திருக்கோயில்கள் மூன்றாகும்.
இவை
- செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
- நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
- நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்
ஆகிய திருக்கோயில்களாகும்.

இத்திருக்கோயில்களில் அமைந்துள்ள பாதங்கள் மற்றும் பாதக் குறுஞ்சிற்பங்களை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளை அறிய முடிந்தது.


செந்தலை விமானம் மற்றும் மண்டப பாதங்கள்


செந்தலை திருக்கோயிலில் பாதபந்தத் தாங்குதளத்துடன் அமைந்துள்ள விமானத்தின் கண்ட பாதங்கள் சிற்பங்கள் செதுக்கப்பெறாமல் வெறுமையாக அமைந்திருக்க, விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபத்தின் ஒரு சில பாதங்களில் மட்டும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் மண்டபத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் கணிசமாக வேறுபடுகின்றன.

நியமத்தில் விமானத் தாங்குதளம் பாதபந்தமாக அமைந்திருந்தாலும் அவற்றின் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் காணப்படுவதில்லை. தாங்குதளத்திற்கு மேல் அமைந்துள்ள வேதிகைப் பாதங்களில்தான் குறுஞ்சிற்பங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. இம்மூன்று திருக்கோயில்களுள் வேதிகைத் தொகுதி பெற்ற ஒரே திருக்கோயில் நியமம் மட்டுமே.

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரத்தில் விமானத்தைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுச்சுவரின் பாதபந்தத் தாங்குதளக் கண்டபாதங்களிலும் மண்டபத் தாங்குதளப் பாதங்களிலும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மூன்று திருக்கோயில்களுள் சுற்றுச்சுவர் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் பெற்ற ஒரே கோயில் நார்த்தாமலை மட்டுமே.

ஒரே கலை மரபைச் சேர்ந்த திருக்கோயில்களாக அடையாளப் படுத்தப்படும் ஏழு திருக்கோயில்களுள் நான்கில் ஏன் பாதச்சிற்பங்களே இல்லை? மீதமிருக்கும் மூன்றனுள் அமைந்துள்ள பாதச் சிற்பங்களும் ஏன் இத்தனை மாறுபாடுகளுடன் அமைந்துள்ளன ?
News Source : Varalaaru
தவிர்க்க முடியாமல் எழும் இத்தகைய கேள்விகளே புதிய திறப்புகளுக்கு வித்திடுகின்றன.

சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: ஸ்ரீரங்கத்தில் மும்முனை போட்டி?


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இதற்காக, அந்தப் பகுதியின் மக்கள் மனநிலையை அறிய, திராவிடக் கட்சிகளோடு, பா.ஜ.,வும் போட்டிப் போட்டு, களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, சிறை தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதனால், ஏற்கனவே அவர் போட்டியிட்டு வென்ற, ஸ்ரீரங்கம் தொகுதி, காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதமே அங்கு இடைத் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. வரும், 2016ல் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, இந்த தொகுதி இடைத்தேர்தல், முன்னோட்டமாக இருக்கும் என்பதால், ஸ்ரீரங்கத்தில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வும் பா.ஜ.,வும் முனைப்புடன் இருக்கிறது. இதற்காக, தொகுதியில், திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மூலம், மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

சாதுர்யமான செயல்:

இதுகுறித்து தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் என்பது தி.மு.க.,வுக்கு முக்கியமான தேர்தல். தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க., உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியது, சாதுர்யமான செயல் என, தலைமை முடிவெடுத்திருந்தாலும், கட்சியினர் ரொம்பவே சோர்ந்து விட்டனர். இந்த சூழ்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க., குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுகளை வாங்கவில்லை என்றால், கட்சி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதேபோல, ஏதாவது காரணம் சொல்லி, போட்டியிடாமல் ஒதுங்கினாலும், மக்கள் தி.மு.க.,வை முற்றிலுமாக புறக்கணித்து விடுவர். இதை தலைமைக்கு பலரும் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டனர். இதனால், தலைமை ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்டாயம் போட்டியிடுவது என, முடிவெடுத்து விட்டது. தொகுதி எப்படி இருக்கிறது என்பதற்காக, கட்சியினரை விட்டு அவசர அவசரமாக மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கினர். தொகுதியில் பிரதானமாக இருக்கும் முத்தரையர், பிராமணர், தலித் ஆகியோர், தி.மு.க., மீது பரிவுடன் இருப்பதால், மும்முனைப் போட்டியில் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என, சொல்லியிருக்கின்றனர். அதற்காக, தொகுதியில் இருக்கும் முத்தரையர் ஒருவரை வேட்பாளராக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர்.

பா.ஜ., தரப்பில் கூறியதாவது:

ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா தண்டனை அடைந்திருப்பதால், ஊழலுக்கு எதிரான நிலை யில் பா.ஜ., இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக, ஒருவரை வேட்பாளர் ஆக்கினால், கட்சிக்கு இமேஜ் கூடும் என்பதோடு, வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தலைமையின் விருப்பப்படி, இந்த தொகுதியில் இருந்து டில்லி சென்று, தலைமையுடன் இணக்கமாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிர்வாத ஆச்சாரியை வேட்பாளர் ஆக்க, தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக தலைமையும் அதே எண்ணத்தில் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, கட்சியை வளர்க்க முடிவெடுத்திருப்பதால், ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி கட்டாயம் போட்டியிடும்.

பரிதாப உணர்ச்சியுடன்...:

அ.தி.மு.க., தரப்பில் கூறியதாவது: ஜெயலலிதா கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், மக்கள் அவர் மீதும் அ.தி.மு.க., மீதும் பரிதாப உணர்ச்சியுடன் இருக்கின்றனர். கட்சிக்கு அது லாபம். அதேபோல, அ.தி.மு.க., ஆட்சி மீதும் மக்கள் திருப்தியுடன் இருப்பதால், கட்சி, அங்கும் எளிதாக வெற்றி பெற்று விடும். தொகுதியில் உளவு போலீஸ் மூலமாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே இருப்பதால், வெற்றி எங்களுக்குத்தான். தி.மு.க.,வும் பா.ஜ.,வும் எப்ப டியும் களத்துக்கு வரும். அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி விடும் என்பதால், அ.தி.மு.க.,வின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

News Source : DINAMALAR

வெள்ளி, 14 நவம்பர், 2014

சங்கங்கள் - 01


சங்கங்கள் - 01

சமீபத்தில் நமது சமூக சங்கங்கள் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று எனக்கு தெரிந்த காரணங்களை சொல்லப்போவதாக சொல்லி இருந்தேன் பின்னர் பணிசுமையின் காரணமாக எழுத முடியவில்லை.. எழுதுவோமா..? வேண்டாமா..?? என்றும் இடையில் ஒரு குழப்பம் ஏற்பட்டது, எழுதாமல் போனால் அதைவிட இந்த சமூகத்திற்க்கு செய்யும் துரோகம் வேறு இருக்க முடியாது என்பதனால் யார் வருத்தப்பட்டாலும் சரி எழுதிவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.

நான் பெயரை குறிப்பிட்டே அனைத்து சங்கங்கள் (எனக்கு தெரிந்த, அறிமுகமாக அனைத்து சங்கங்கள் பற்றியும் எழுதவே விரும்புகிறேன்) பற்றியும் எழுதப்போகிறேன், அனைத்து சங்கங்களோடும் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது இருந்தாலும் சுட்டிக்காட்டப்படாத தவறு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சியாக நான் கருதுவதனால், சுட்டிக்காட்டிய என்மீது கோபம் கொள்வதைவிட தவறுகளை திருத்தி வீரு நடைப்போட்டு என் சாதியை அழைத்து செல்லுங்கள் என்று உரிமையோடு கேட்டு இந்த தொடரை எழுதுகிறேன்.

முதல் சங்கமாக நூறு ஆண்டுகள் பழமையான, பல சாதிகளுக்கும் சங்கம் என்றால் என்னவெற்று ? இலக்கணம் வகுத்ததுமான "தமிழ்நாடு முத்தரையர் சங்கம்" பற்றி எழுதுவதுதான் சரியானதாக இருக்க முடியும்.

அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வரை அத்தனை தலைவர்களையும் அழைத்து மாநாடு போட்டதும் இந்த சங்கம்தான், தமிழ்நாட்டின் மையமாம் திருச்சி மாநகரின் மத்தியில் மீசையை முறுக்கி, கனல் கக்கும் கண்ணோடு எம் பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்ததும் இந்த சங்கம்தான், 29 பட்டங்களோடு தமிழ்நாடெங்கும் பரந்து, பிறிந்து வாழ்ந்த "முத்தரையர்" மக்களை நீங்கள் முத்தரையர் என்று சொல்லி ஒருங்கிணைத்ததும் இந்த சங்கம்தான், பிற்படுதப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் கமிசன் அறிக்கைக்காக (இந்த அறிக்கை வெளிவரவில்லை, வந்திருந்தால் இன்று முத்தரையர்களுக்கு கிடைக்காமல் போன கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் முழுமையாக கிடைத்திருக்கும்) ஊர்தோறும் அலைந்து திரிந்து உழைத்ததும் இந்த சங்கம்தான், வலையர் முதல் தலையாரிவரை அத்தனை பேரையும் இணைத்ததும் இந்த சங்கம்தான் இன்று "இரத்தம் தெரிக்க, நரம்பு புடைக்க" பேசும் எந்த சங்கமும் இந்த சங்கம் செய்ததில் ஒரு சதவீதம்கூட செய்தது கிடையாது, அப்படி சங்கங்களுக்கெல்லாம் தலை சங்கமாய் விளங்கிய "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை" சிலர் பதவி மோகம் கொண்டும், இன்னும் சிலர் பண மோகம் கொண்டும் சீரளித்து இன்று நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள்,

சிவகங்கை மாவட்டம் தந்த சிங்கம், தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் அலைந்து திரிந்து இந்த சங்கத்தை வளர்க்க "பதவி வெறியோ, பண வெறியோ" இல்லாத ஏமாளி தலைவர் அய்யா. ஆண்டியப்பன் காலத்திற்க்கு பிறகு இரட்டை குதிரையில் பயணப்பட நினைத்து இப்போது இரண்டு தலைவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது, இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால் இந்த சாதி வளர உதவும், ஆனால் பதவி இருக்காது, சாதி பெரிதா..? பதவி பெரிதா..?? என்பதை அந்த தலைவர்களின் மனசாட்சியிடமே விட்டுவிடலாம்,

அப்போதிலிருந்து இந்த சங்கத்தின் செயலாளராக இருக்கும் திருச்சி திரு. மரு. பாஸ்கரன் அவர்கள் மறைந்துபோன சங்கத்தை தேடி புதுபிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார், அண்ணாருக்கு தோல் கொடுப்பது ஒவ்வொரு முத்தரையனின் கடமை என்பது எனது கருத்து, இந்த சங்கம் ஒருவேளை மூழ்கி போனால் அன்று முத்தரையன் என்று மீசை முறுக்கி திரிவோருக்கு சந்தோசத்தை தரலாம் ஆனால் அதைவீட கேவலம் ஒன்றும் இந்த சாதிக்கு இருந்துவிட முடியாது, அதே நேரத்தில் அந்த சங்கத்தினை இப்போது திறம்பட வழி நடத்த நினைக்கும் மரியாதைக்குறிய திரு, மரு.பாஸ்கரன் அவர்களிடன் பகிரங்கமாகவே இந்த கோரிக்கையினை வைக்க விரும்புகிறேன்,

முதலில் அமைப்பினை இளைஞர்களும் விரும்பும் வண்ணம் மாற்றம் செய்யுங்கள் இளைய தலைமுறைக்கு அதிக வாய்ப்பினை தாருங்கள், தேர்தல் காலங்களில் அவசரப்பட்டு யாரையும் ஆதரிக்காமல் உறவுகளின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப சரியான நிலைப்பாட்டினை எடுங்கள்

இந்த சங்கம் மீது இளைஞர்கள் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு இந்த சங்கம் வேகமாக செயல்படவில்லை, உடனே முடிவினை எடுக்கவில்லை என்பது,அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது ஒன்றும் சினிமா நடிகர்களின் சங்கம் கிடையாது கவர்ச்சிக்காக எதையாவது செய்வதற்க்கு, வீரம் என்று பொல்லாப்பை தேடி தருவதற்க்கு, பலரின் உழைப்பால் உருவான சங்கம் இது, நூறு ஆண்டுகளாய் இன்று நாம் இந்த சாதிக்காக எதுவெல்லாம் பெருகிறோமோ, எதையெல்லாம் பெருமையாக கருதுகிறோமோ அது அத்தனையும் இந்த ஒரே சங்கம்தான் பெற்று தந்தது என்பதை மறந்துவிடக்கூடாது
கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், இப்போதே நூறு சங்கங்கள் நம்சாதியில் இருக்கலாம், இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் சங்கங்கள் புதிதாக உருவாகலாம் ஆனால்...!

இதுதான் தலைசங்கம், இதன் வீழ்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வீழ்ச்சி, இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வளர்ச்சி இதை மனதின் நிறுத்தி வீழ்ச்சியா..? வளர்ச்சியா..? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இறுதியாக இந்த சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணிகள் சுருக்கமாக:

1. தலைமையில் உண்டான பிரிவு
2. அரசியல் முடிவுகளை மக்களின் மனநிலை அறிந்து எடுக்காமை
3. இளைஞர்களுக்கு அதிக வாய்பளிக்காமை
4. ஒருமுறை ஒரு பதவியில் ஒருவரை நியமித்தால் பிறகு கடைசிவரை அவரே அந்த பதவியில் தொடர்வது
5. மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது
6. அடிக்கடி கூட்டங்கள் நடத்தாமல் விட்டது.
7. பொருளாதார பற்றாக்குறை

இனி இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சுருக்கமாக:

1. சங்கத்தின் நிதி ஆதரத்தை சரியான நிதி ஆலோசகரின் துணைகொண்டு உயர்த்துதல்
2. ஒரே தலைமையாக ஆக்குதல்
3. இளைஞர்களுக்கு முழுமையான வாய்ப்பினை வழங்குதல்
4. அடிக்கடி கூட்டங்கள், தலைவர்களின் சுற்றுபயணத்தினை மேற்கொள்ளுதல்
5. நிர்வாகிகளை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைத்தல்

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

திங்கள், 10 நவம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை..?


ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை..?

ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியையும் இழந்திருக்கிறார். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது இத்தொகுதி. ஜெ.வின் மேல்முறையீட்டு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிவாசிகளின் மனநிலை என்ன என்பதை அறிய களமிறங்கினோம்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகரையொட்டியுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 லட்சத்து 21ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர். முத்தரையர் இனத்தவர்களே இங்கு அதிகம். இவர்களையொட்டி தலித், உடையார், பிராமணர்கள், நாயுடு, வெள்ளாளர், யாதவர் ஆகிய சமுதாயத்தினர் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர். இந்த சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் மனதிற்கொண்டு ஆண்- பெண்- வயது- தொழில் என அனைத்து அம்சங்களையும் கணக்கில்கொண்டு 20 ஆயிரம் பேரை கடந்த அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சந்தித்து சர்வே மேற்கொண்டோம்.

More News : Nakeeran

தமிழக காங்கிரசில் அடுத்த பிளவு: கலகலப்பூட்ட புதுகட்சி துவக்கம்

தமிழக காங்கிரசில், முன்னாள் மத்திய அமைச் சர் வாசன் தலைமையில் பிளவு ஏற்பட்டு, ஒரு வாரம் ஆகாத நிலையில், அடுத்ததாக, ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குறளரசு ஜெயபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் செங்கை செல்லப்பன் ஆகியோர் தமிழக காங்கிரசிலிருந்து விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை இன்று, துவக்குகின்றனர்.எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளோடு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலும் இருந்தவர் குறளரசு ஜெயபாரதி, தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர், செங்கை செல்லப்பன். இவர், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் தலைவராக இருந்தார். இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்.இவர்கள் இருவரும், தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற புது கட்சியை துவக்குகின்றனர். கட்சின் துவக்க விழா, சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, குறளரசு ஜெயபாரதி கூறியதாவது:தமிழக காங்கிரசில், முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால், இரண்டு சமூகத்தவர்களையும் போற்றும் விதமாக, காங்கிரசிலிருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பிக்கிறோம். தமிழகத்தில், புதிய கட்சி காங்கிரசுக்கு மாற்றாக இருந்து செயல்படும்.காங்கிரசை வீழ்த்துவது தான், எங்களின் பிரதான நோக்கம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


News Source : DINAMALAR

வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆலங்குடி அருகே முத்தரையர் சங்க கூட்டம்


ஆலங்குடி,: முத்தரையர் சங்க கூட்டத்தில் கனிமொழி எம்பிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள திருமலைராயசமுத்திரத்தில் முத்தரையர்  சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் திருமலைநம்பி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் எந்த ஒரு பல்கலைக் கழகத்திற்கும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த யாருக்கும் துணைவேந்தர் பதவி வழங்கப்படவில்லை. எனவே பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற பல பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தரையருக்காகக் குரல் கொடுத்தமைக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News Source : DINAKARAN

செவ்வாய், 21 அக்டோபர், 2014

எனது மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களோடு ஒரு வேண்டுகோளும்..!


எனது மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களோடு ஒரு வேண்டுகோளும்..!

எனதருமை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மனம் நிறைந்த தீபஒளி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கும் அதே நேரம் உரிமையோடு ஒரு வேண்டுகோளையும் வைத்திட விரும்புகிறேன்..!

உலகம் முழுவதும் பரந்து வாழும் முத்தரையர் எனும் உயர்குடிப்பிறப்புகளே நம் இனம் அரசியல் வீழ்ச்சியடையவும், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோவவும் பிரதான காரணியாக இருப்பது "மது அருந்தும் பழக்கமே" இதனால் நாம் இழந்ததும், இழந்துகொண்டு இருப்பதும் ஏராளம் இதை இனத்தின்பால் அக்கறையுள்ள ஒவ்வொரு முத்தரையனும் அறிவான்.

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”

என்ற வள்ளுவன் வாக்கு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நமக்கு சாலவும் பொருந்தும், "உயர்குடித் தன்மையாம் ஒழுக்கம் தவறுதல், தாழ்ந்த பிறப்பாகிவிடும்"  அப்படி ஒரு நிலைமை நம் குலத்திற்க்கு வருவதை உண்மையான முத்தரையன் யாரும் விரும்ப மாட்டான் என்ற நான் நினைக்கிறேன்,

காசு உங்களுடையது..! உடம்பும் உங்களுடையது..!! யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது அதனால்தான் வேண்டுகோளாய் இதனை முன்வைக்கிறேன், குடிப்பது உங்கள் உரிமை சார்ந்த விசயம் அதே நேரம் ஒட்டுமொத்த இனத்தின் வீழ்ச்சிக்கும் தெரிந்தோ, தெரியாமலோ நீங்களும் காரணமாக அமைவது சரியா..? என்பதை சிந்தித்து பாருங்கள்,

 நாளை தீப திருநாள் இன்னேரம் பலரும் பலமான திட்டங்களை மனதில் போட்டு வைத்திருப்பீர்கள், அதில் பிரதானமானது மது அருந்துவதாகவே இருக்கும், அதனால்தான் தமிழக அரசே தீபாவளி விற்பனை இலக்காக 250 கோடியை எட்ட வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிற்து, இதில் மூன்றில் ஒரு பங்கு தொகை நம்மினத்தவர் பணமாகதான் இருக்கும்,

அந்த நிலையினை மாற்றி "மது இல்லாத தீபாவளியாக" இந்த ஆண்டு தீபஒளி திருநாளை கொண்டாட வருமாறு முத்தரையர் பேரினத்தினை உரிமையோடு அழைக்கிறேன்.

"மது இல்லாத தீபாவளி, மறுபடியும் முத்தரையர் ஆட்சியின் முதல்படி" வாருங்கள் மது இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம், மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம்.

வாழ்த்துக்களுடன்....

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வியாழன், 16 அக்டோபர், 2014

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? : கனிமொழி வற்புறுத்தலால் ஸ்டாலின் அப்செட்

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முத்தரையர் ஒருவரை, போட்டியிட வைக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வலியுறுத்தியதால், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர் நேருவும், அதிருப்தி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறை தண்டனை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனது. அதனால், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி, தற்போது காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு, வரும் மார்ச் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., ஆர்வமாக உள்ளது. அதற்காக, சமீபத்தில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், 'ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட்டது போல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, விருப்பம் தெரிவித்து, கருணாநிதி பேசினார்.
இதனால், உடனடியாக, அந்த தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், 'ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், முத்தரையர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
அப்போது தான், கட்சிக்கு கவுரவமான ஓட்டுகள் கிடைக்கும்' என, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தல் : டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், முத்தரையர் இனத்தை, சேர்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். கிட்டதட்ட, அந்த பகுதிகளில், 40 சட்டசபைத் தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி, அந்த இனத்தவரிடம் உள்ளது. முத்தரையர் சமுதாயத்தின் ஓட்டுகளை, அ.தி.மு.க., தான் தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த ஓட்டு வங்கியை தி.மு.க., பக்கம் மாற்றுவதற்கு, வரு ம் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் முத்தரையர் சமுதாய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இதற்காக, கட்சியிலும் மாவட்ட செயலர் பதவி உட்பட, பல்வேறு பதவிகளும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரை, தி.மு.க., சார்பில் வேட்பாளராக்க வேண்டும். இப்படி, நிறைய விஷயங்களை, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
இதனால், தன் ஆதரவாளர் ஒருவருக்கு ஸ்ரீரங்கத்தில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என, திருச்சி மாவட்ட செயலர் நேருவும், தன்னை மீறி கட்சியில் கனிமொழி செயல்படுகிறாரே என, ஸ்டாலினும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

News Source : DINAMALAR

புதன், 15 அக்டோபர், 2014

ஸ்ரீரங்கம்..!

ஸ்ரீரங்கம்..!

இது ஏதோ ஒரு ஊர்தானே என்று ஒதுங்கி போய்விட முடியாது.., காரணம் இது “முத்தரையர் “கோட்டை இந்த தொகுதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்து இன்று பதவிபோய் சிறையில் இருக்கும் செல்வி. ஜெயலலிதா வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதி இதுதான், ஒருமுறை விட்டுகொடுத்தோம் என்பதற்காக இது நம்முடைய தொகுயில்லாமல் போய்விடாது.

 அவர் வேட்பாளராக இருந்தபோது எதிர்த்து போட்டியிட்டவர் திமுக சார்பில் நின்ற  ஆனந்த் எனும் “முத்தரையர்” என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள், இன்று இந்த தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது ஆகவே விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கும் முத்தரையர் கோட்டையில் திமுகவாகட்டும், அதிமுகவாகட்டும் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் யார் வேட்பாளரை அறிவித்தாலும் அது முத்தரையராகவே இருக்க வேண்டும்..! அதனை உறுதிபடுத்த வேண்டியது அந்த அந்த கட்சியில் இருக்கும் முத்தரையர்களின் கடமை, உங்களால் முடியாத பட்சத்தில் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.

முத்தரையர் யார் வேட்பாளராக இருந்தாலும் அவர்தான் வெற்றி பெற வேண்டும், காரணம் இது முழுமையான முத்தரையர் தொகுதி  நீங்கள் யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருந்துக்கொள்ளுங்கள் , முத்தரையராக இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்களோ, எப்படி பெருவீர்களோ தெரியாது இந்த தொகுதியை உங்கள் கட்சிகளிடமிருந்து பெற்று வாருங்கள், இந்த தேர்தல்களத்தில் முத்தரையர் சமுதாய சங்கங்கள் நின்று நிதானமாக முடிவினை எடுத்து "முத்தரையர்களை" மட்டுமே ஆதரிக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், இது முத்தரையர் பலம் காண்பிக்க வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து இப்போதே தேர்தலுக்கு தயாராவோம், எதிரி யார் ? துரோகி யார் ? என்பதையெல்லாம் போகும்வழியில் பார்த்துக்கொள்வோம், வரப்போகும் இடைத்தேர்தல் முத்தரையர்களின் அரசியல் எழுச்சிக்கு அடையாளமாக இருக்க வேண்டும். விரைவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் இளைஞர்களின் ஆலோசனை கூட்டத்தினை நடத்திடுவோம்.

இணைவோம் உணர்வாய்...

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 24 செப்டம்பர், 2014

அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் கருணாநிதியிடம் கனிமொழி வற்புறுத்தல்

தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அடுத்த சட்டசபை தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக, பொருளாளர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, தன் மகிழ்ச்சியை கருணாநிதியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அப்போது, தி.மு.க., அமைக்கும் கூட்டணியில் ம.தி.மு.க.,வை சேர்த்துக் கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ளதாகவும், கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.

சமீபத்தில், அறிவாலயத்தில், நடைபெற்ற தி.மு.க., முப்பெரும் விழாவில், '2016ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு பின், கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமையும்' என, பொருளாளர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்தார்.அவரது அறிவிப்புக்கு, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினின் இந்த பேச்சு, பூந்தமல்லியில் நடைபெற்ற ம.தி.மு.க., மாநாட்டில் இருந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு தெரிய வந்தது. உடனே, அவர், 'அ.தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு நண்பர்களுடன் இணையத் தயார்' என, தி.மு.க.,விடம் கூட்டணி வைக்கும் தன் விருப்பத்தை சூசகமாக அறிவித்தார்.

ஸ்டாலின், வைகோ வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, கருணாநிதியை சந்தித்து, தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார் கனிமொழி.அப்போது, சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக, சில யோசனைகளையும் அவர் முன் வைத்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியை, அடுத்த சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறியுள்ளதால், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பல கட்சித் தலைவர்களும், ஆர்வமாகி இருக்கின்றனர்.
இப்படி ஸ்டாலின் கூறிய பின், தலைவர் கருணாநிதியை, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பல்வேறு விஷயங்களை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

'தென் மாவட்டங்களில் தி.மு.க.,வின் பலம் கூடுவதற்கு, அழகிரியை கட்சியில் விரைவில் சேர்க்க வேண்டும்; அ.தி.மு.க., பலமாக இருக்கும் மேற்கு மாவட்டங்களில், ஓட்டு வங்கியை ஈடுகட்ட, அந்த மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்குடன் உள்ள ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும்; வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கும், தென் மாவட்டங்களில் நாடார்களுக்கும், மத்திய மாவட்டங்களில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் அனைத்தையும் தி.மு.க., பக்கம் கொண்டு வர வேண்டும்' என, நிறைய விஷயங்களை கருணாநிதியிடம், கனிமொழி வலியுறுத்தி கூறியுள்ளார்.இதற்கு, தேர்தல் நேரத்தில் கவனத்தில் வைத்து செயல்படலாம் என, கருணாநிதி, கனிமொழியிடம் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

News Source : DINAMALAR

மாணவர்கள் சீரழிவதைத் தடுக்க ஆபாச இணைய தளங்களை முடக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமையில் நடந்தது.
சாமி விஸ்வநாதன், தங்கசங்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். பெரியகோபால் வரவேற்றார். தீர்மானங்களை விளக்கி மாவட்ட தலைவரும் பொது செயலாளருமான மரு.பாஸ்கரன் பேசினார்.
கூட்டத்தில் முத்தரையர்கள் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதால் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த திட்டமிட மாநில அளவிலான பிரதிநிதிகள் மாநாட்டை நவம்பர் மாதம் திருச்சியில் நடத்துவது,
முத்தரையர் சங்கம் சார்பில் மதுவின் தீமைகளை எடுத்து கூறி ஊர்கள் தோறும் பிரச்சாரம் செய்து மதுவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் இனைந்து போராட்டங்களில் கலந்து கொள்வது, திருச்சி முக்கொம்பில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணி மண்டபம் அமைத்திட தமிழக முதல்–அமைச்சரை கேட்டும்,
இளம் வயது மாணவர்கள் சீரழிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆபாச இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுப்பதுடன், போலீசார் ஆபாச படங்கைளை பதிவிறக்கம் செய்து கொடுக்கும் கம்ப்பயூட்டர் மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கேட்பது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முத்தரையர் சங்கம் எப்போதும் ஆதவராக இருப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதன், 17 செப்டம்பர், 2014

தமிழ் இனி மெல்ல..


அரசன் பேசும்போது குறுக்கிடுவது அழகல்ல என்று அமைதியாக இருக்கும் முருகேசன், அவனுடைய ஆணைக்கு மரியாதை செலுத்த, தலையை மட்டும் அசைக்கிறான்.
“இலங்கை மன்னர் மகிந்தரும் ஐயாயிரம் சிங்கள வீரர்களைப் பொக்கிஷப் பாதுகாப்புக்காகத் தர ஒப்பம் அளித்திருக்கிறார். அவர்களுக்கும் நீயே தலைவனாக இருப்பாய். சோழர்களை உறுதியாக இத்தடவை தோற்கடித்து விடுவோம். நீயும் உனது கடமையை உணர்ந்து செயல்படுவாயாக! உன் கவனம் சிதறக்கூடாது, உன் மனைவி மக்களைப் பற்றிய கவலை இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களைப் பாண்டிய நாட்டின் பாதுகாப்பான இடமான நெல்லைக்கு அனுப்பி வைக்க என்று உனக்கு ஆணையிடுகிறோம். அவர்களின் பாதுகாப்புக்கு எமது உத்திரவாதத்தை உனக்கு யாமே அளிக்கிறோம்!” என்று மேலும் விளக்குகிறான் விக்கிரமன். 
“ஆணை அரசே!” என்று பெருமிதத்துடன் பதிலளிக்கிறான் முருகேசன். கடைசியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டி நாட்டுக்காக வாளேந்தும் தருணம் வருகிறது என்பதை அறிந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் பளிச்சிடுகிறது.
“மிக்க மகிழ்கிறேன், முருகேசா!” என்ற விக்ரமன் மேலும் தொடர்கிறான்.
“உன் மாதிரி வீரர்கள்தான் பாண்டி நாட்டுக்குத் தேவை! நாம் வெற்றி பெருவோம்! சோழர்களைத் தஞ்சைக்கு விரட்டி, கிடுக்கிப்பிடி போட்டு மடக்குவோம்! நமது வெற்றி விழாவிலே கலந்து கொள்ள நீ மதுரைக்கு நமது பரம்பரைப் பொக்கிஷத்தோடு வரத்தான் போகிறாய்! அங்கு உன் மனைவி மக்களுடன் இணைந்து பாண்டி நாட்டுக்கு மேலும் பல வீர மக்களைப் பெற்றுத் தரத்தான் போகிறாய்! வெற்றிவீரனுடனும், காளையப்பனுடனும் நாளை பாண்டி நாட்டுக்குத் திரும்பும் என்னுடன் உன் மனைவியையும், குழந்தைகளையும் அனுப்பி வைப்பாயாக!” அவன் முதுகில் அன்புடன் தடவிக் கொடுக்கிறான்.
முருகேசனின் மெய் சிலிர்க்கிறது. நான்கு ஆண்டுகளாக வாளாவிருந்த பாண்டியப் படை சோழர்களின் மீது பாயப் போகிறது என்றதை அறிந்து மகிழ்கிறான். மீனக் கொடி மீண்டும் மதுரையில் பறக்கும் நாளைக் கண்ணுறப் போவதை எதிர்நோக்கி அவன் உள்ளம் பூரிக்கிறது.
“ஆணை, அரசே! என் உடலில் கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை பாண்டியப் பொக்கிஷம் பாதுகாக்கப்படும்! ஒவ்வொரு பாண்டிய மறவனும் ஒன்பது சோழவீரர்களுக்குச் சமம்! தினவெடுத்த எங்கள் தோள்களுக்கு, அவர்களது உயிரைக் குடிக்கும் போர் ஒரு பயிற்சியாக இருக்கும்! இது சொக்கநாதர் மீதும், அங்கயற்கண்ணி அம்மை மீதும் ஆணை!” வீரத்துடன் முழங்குகிறான்.
“இன்று இரவு நான் உன் வீட்டில் உணவு உண்டுவிட்டுத்தான் செல்லப் போகிறேன். என்னுடன் மொத்தம் இருபது பேர் வருவார்கள். இப்பொழுது காளையப்பன் உன்னுடன் வருவான். அழைத்துச் செல்.” என்று திரும்பி நடக்கிறான் விக்கிரம பாண்டியன்.
வீட்டிற்கு வந்த முருகேசன் முதல் வேலையாகத் தன் புஜத்தில் இருந்த தாயத்தை அவிழ்த்து சொக்கனின் கழுத்தில் மாலையாக அணிவிக்கிறான். வள்ளிக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. “என்ன அத்தான் இது. நம்ம பரம்பரைச் சொத்தை இப்படித் திடுமுனு சொக்கன் கழுத்திலே கட்டுறீங்களே!” என்ற பதைபதைப்புடன் வினவுகிறாள் வள்ளி.
“மகாராசா ரவைக்கு (இரவில்) நம்ம வூட்டுக்குச் சாப்பிட வரப்போறாரு, புள்ளே! வெட்டிக் கேள்வி கேக்காம இருவத்தஞ்சு பேருக்கு உடனே சாப்பாடு ஆக்கற வேலையப் பாரு!” என்று முருகேசனிடமிருந்து அதட்டலான பதில் வருகிறது. .
தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 3..தொடர்கிறது 
                                                  அத்தியாயம் 3
                            தஞ்சை அரண்மனை
                              ராட்சச, பங்குனி 10 - மார்ச் 24, 1016
கிட்டத்தட்ட முப்பத்தைந்திலிருந்து நாற்பது பேர்கள் அரச ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றனர். இராஜேந்திரனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜாதிராஜனுக்கு அருகில் இருக்கும் இருக்கைகளில் சிவாச்சாரியனும், அவனுக்கு அடுத்தபடியாக இறையிரவன் பல்லவராயரும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜேந்திரதேவனுக்கு அடுத்த மூன்று இருக்கைகளில் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரும், வடபுல, மற்றும் தென்புல அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறான். இன்னும் கடற்படைத் தலைவர்கள், தண்டநாயகர்கள், ஒற்றர் தலைவர்கள், துணை அமைச்சர்கள், நிதியாளர்கள், என்று பலப் பலபேர் குழுமியிருக்கிறார்கள். மண்டபத்தைத் தாண்டி உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் ஒலி கேட்காத தூரத்தில் வீரர்கள் சுற்றிலும் காவலுக்கு நிற்கிறார்கள். இராஜேந்திரன் அரியணை ஏறியபின் முதல்முதலாக சோழப் பேரரசின் முக்கியமான அரசு அதிகாரிகளைக் கூட்டி நடந்தும் கலந்துரையாடல் இது. சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகம் என்ற முறையில் சிவாச்சாரி எழுந்து நின்று கலந்துரையாடல் ஆரம்பமாவதை அறிவிக்கிறான்.

“கோப்பரகேசரியாரின் ஆணைக்கிணங்க அனுப்பப்பட்ட ஓலை மூலம் இங்கு வந்து குழுமியிருக்கும் சோணாட்டின் தூண்களான உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். கோப்பரகேசரியாரின் ஆணைப்படி இக்கலந்துரையாடல் துவங்குகிறது.”

சிவாச்சாரி தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறான். ஆலோசனை மண்டபமே அமைதியாகி விடுகிறது. அனைவரும் இராஜேந்திரனின் முகத்தையே உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். தனது மீசையை நீவிவிட்டுக் கொள்கிறான் இராஜேந்திரன். பிறகு மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும் தனது பார்வையைச் சில கணங்கள் நிலை நிறுத்துகிறான். அவன் இம்மாதிரி அனைவரையும் கண்டுகொள்ளப் பல நிமிடங்கள் ஆகின்றன. அவனது பார்வை தங்கள் மேல் விழுகிறது என்பதை அறிய ஆரம்பித்த உடனேயே அனைவரும் தங்கள் மன ஓட்டத்தைக்கூடக் கட்டுப்படுத்தி, தங்கள் பார்வையை அவன் மீது நிலை நிறுத்துகின்றனர்.

இராஜேந்திரனுடைய தனித்திறமையைக் கண்கூடாக அறிகிறான் சிவாச்சாரி. இராஜராஜரைவிட அவன் எந்தவிதத்தில் மாறுபடுகிறான் என்பதை அவன் அனைவரின்மீது செலுத்தும் கண்ணோட்டம் அவனுக்குத் தெரிவிக்கிறது. தான் பேசப் போகும் ஒவ்வொரு சொல்லிலும் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லாமலேயே தெரிவிக்கும் அவனது திறமை அவனது கோப்பரகேசரி என்ற பட்டத்தை நிரூபிக்கிறது. இராஜராஜருக்கு எந்தவிதத்திலும் அவன் சளைத்தவனாக இருக்கமாட்டான், சோழப் பேரரசை மிகவும் உன்னத நிலைக்கு அவன் கொண்டு வருவான் என்று அவன் உள்மனம் தெரிவிக்கிறது.

தொண்டையை இலேசாகச் செருமிக் கொள்கிறான் இராஜேந்திரன். உடனே மண்டபத்தில் இருக்கும் அனைவருமே மகுடியில் கட்டுண்ட நாகமாக மாறுகிறார்கள்.

“எமது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் சோழ நாட்டின் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். நமது பேரரசிற்குச் சிறந்த அடித்தளத்தை அரசகேசரியான எனது தந்தையார் அமைத்துக் கொடுத்து பெருவுடையாரின் அடி சேர்ந்தார்கள். மும்முடிச் சோழனாக, திரிபுவனச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியைத் தனது குடைக்கீழ் கொணர்ந்தார். அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும், அவரது கனவை நாம் தொடர்ந்து நனவாக்க வேண்டும். அவருடைய பணியைத் தொடர்வது - அவர் அமைத்த அடித்தளத்தின் மேல் பெரிய கட்டிடத்தை நிறுவுவதே ஆகும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடியே உங்களை அழைத்துள்ளேன்.”

தனது பேச்சை நிறுத்தி அனைவரையும் நோக்குகிறான் இராஜேந்திரன். இந்தத் தடவை ஒவ்வொருவராக நோக்காமல் பொதுவாக மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறான்.

“கரிகால் பெருவளத்தான் பூம்புகாரையும், உறையூறையும் தலைநகராகக் கொண்டு சோழர் புகழைப் பரப்பினர். அதுமட்டுமல்லாது, அடிக்கடி வெள்ளத்தில் முழுகடித்து வந்த காவிரியிடமிருந்து சோழநாட்டை மீட்க அதற்குக் கரையமைக்கத் தீர்மானித்தார். அத்தோடு நிற்காமல், பருவ காலத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அந்த நீரைத் தேக்கி, கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து செந்நெல் விளைவிக்கவும் முடிவெடுத்தார்.

“அதை நிறைவேற்ற, இலங்கையிலிருந்து பல்லாயிரக் கணக்கானோரை அடிமை செய்து கொணர்ந்து காவிரிக்குக் கரையமைத்தார். கொணர்ந்த அடிமைகளின் தலைமீது கல்லேற்றி ஆற்றின் குறுக்கே கல்லணையையும் நிறுவினார். காட்டாறாகக் கட்டற்றுத் திரிந்த காவிரியை அடக்கி, அவளது நீரைக் கட்டுப் படுத்தி, காடுகளைக் கழனியாக்கி, நம் நாட்டைச் செழிப்பாக்கி, பயிர் வளர்க்கும் பொன்னியாக மாற்றினார். அதனால் சோணாடு சோறுடைத்து என்ற பெருமொழியையும் நம்நாட்டுக்குக் கிடைக்கச் செய்தார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு திருநகர்களும் சோழர்களின் பெருமையை இவ்வுலகுக்குப் பறைசாற்றியிருக்கின்றன. இப்படிப்பட்ட மணியான திருநகர்கள் ஒன்றான பூம்புகாரை, கடலன்னை பொறாமையால் எடுத்து விழுங்கி விட்டாள். கலியின் தூதர்களான களப்பிரர்களால் தமிழகமே இருண்டது. சோழ நாட்டின் புகழும் மங்கியது.
“விடிவு வராதா என்று ஏங்கிய சோழ அன்னையின் புலம்பலுக்கு அருமருந்தாக - நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரான விஜயாலய சோழர் முத்தரையர்களின் ஊரான தஞ்சையைத் தமதாக்கிக் கொண்டார். சோழர் புகழை மீண்டும் தழைக்கச் செய்த அவர் காலத்திலிருந்து தஞ்சை சோணாட்டின் தலைநகராகச் சிறந்து விளங்கி வருகிறது. பெருவுடையாருக்கு மிகப்பெரிய கற்றளி அமைத்து அதை மேலும் சிறப்பித்தார் எனது தந்தையார். இருப்பினும் சோணாட்டிற்கு தலைநகராக விளங்கிய புகாரோ, கோழியூரான உறையூரோ அல்ல தஞ்சை என்பது நாமறிந்ததே!”

இதுவரை இனிமையாக இருந்த இராஜேந்திரனின் பேச்சு தஞ்சையைப் பற்றித் திரும்பியதும், அனைவரின் முகங்களிலும் குளிர்ந்த நீரை விசிறியடிப்பதைப் போனற் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தஞ்சை முத்தரையர்களின் ஊர் என்பதும், சோழர்கள் தங்கள் அரசை விரிவு படுத்தியபோது அது அவர்கள் ஆட்சிக்குக் கீழ் வந்ததும், இராஜராஜர் தஞ்சையைச் சோழநாட்டின் தலைநகராக்கியதும் அனைவரும் அறிந்ததே! இருப்பினும் அனைவரும் மறந்து வரும் அதை இராஜேந்திரன் ஏன் நினைவு படுத்துகிறான்!

“சோழ நாட்டுக்கு மையமாகத் தஞ்சை இருந்தபோது அதைத் தலைநகராகச் செய்தது தந்தையாரின் மதியூகமே. இப்பொழுது சோழநாட்டின் எல்லை பறந்து விரிந்திருக்கிறது. இயற்கை அரணாகக் காவிரியும், கொள்ளிடமும் விளங்கியது போக, அவை உள்நாட்டு நீர்ப் போக்காக ஆகியதுதான் கண்கூடு. தொண்டை மண்டலமும், கொங்கு நாடும், கீழ்ச் சேரநாடும், பாண்டிய நாடும் சோழப் பேரரசின் நேர் ஆட்சிக்குக் கீழ் வந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிதான். எனவே, இந்தப் புது நிலங்களுக்கு நடுநாயகமாகவும், நமது வட எல்லைகளை விரைவில் அடையவும் ஏதுவாக இருக்கும் இடத்தில் சோழப் பேரரசின் புதிய தலைநகராக நிர்மாணிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.”

அந்த மண்டபத்தில் “ஆ!” என்ற பேரொலி எழுகிறது. இராஜராஜர் கோலோச்சிய தஞ்சையை விடுத்து இன்னொரு தலைநகரா!

“உங்கள் கருத்துகளைச் செவிமடுக்க ஆவலாக உள்ளோம். முதலில் நமது முத்தரையர் பரம்பரைச் செல்வர் தமது கருத்தைத் தெரிவிக்கட்டும்!”

மெல்ல எழுகிறார் வயதான முத்தரையர். இராஜராஜருடன் களம் பல கண்டவர் அவர். அவரைவிட வயதில் மூத்தவர். தங்கள் முன்னோர்களின் நகரமான தஞ்சை சோழர் வசம் சென்றாலும்,  சோழர்கள் தங்களைச் சிறந்த பதவிகளில் அமர்த்திச் சீரும் சிறப்புமாக நடத்தி வருவதும், தங்கள் குலப் பெண்களை மணவினை செய்து கொள்வதும் அவர்களை சோழர்களில் ஒருவராகவே ஆக்கி வந்திருக்கிறது. அப்படியிருக்கையில் இராஜேந்திரன் திடுமென்று தஞ்சை முத்தரையர்கள் ஊர் என்று குறிப்பிட்டது அவர் இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

“கோப்பரகேசரியாரே!” தான் தூக்கி வளர்த்து மதுராந்தகா என்று வாய் நிறைய அழைத்து வந்த இராஜேந்திரனை அரச மரியாதையுடன் அழைப்பதும் அவருக்கு என்னவோ போலத்தான் இருக்கிறது.

“தாங்கள் எங்கு வேண்டுமானாலும் சோழப் பேரரசின் புதுத் தலைநகரை நிர்மாணிக்கலாம். அதற்காக எக்காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்வேன், ஒன்றைத் தவிர. முத்தரையர்கள் என்றும் சோழர்களின் நண்பர்கள். தஞ்சை தங்களது ஊராகும். எனவே அது சோழர்களது ஊர் அல்ல என்று சொல்வது என் மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்திருக்கிறது!” அவரது குரல் தழுதழுக்கிறது. அப்படியே மெதுவாக இருக்கையில் அமர்ந்து கொள்கிறார் அவர்.

“முத்தரையர் பெருமானே! நான் சொன்னது தங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல. அப்படி அமைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். தங்கள் முன்னோர்கள் தஞ்சையை எங்களுக்குச் சீதனமாக அளித்திருக்கிறார்கள். அதற்காக என்றென்றும் சோணாடு தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. தந்தையார் கற்றளி அளித்துச் சிறப்பித்ததைப் போல யாரும் தஞ்சைக்கு திருச்சுற்று மாளிகை அளித்துச் சிறப்பளிக்க இருக்கிறோம். அதற்காக ஓலைநாயகத்தை திட்டம் தீட்டி நிறைவேற்றவும் பணிக்கிறோம். அது மட்டுமல்ல, தஞ்சைக் காவலராக இனிமேல் ஒரு முத்தரையர் குலக்கொழுந்தே இருந்து வருவார் என்று ஆணையும் பிறப்பிக்கிறோம்.” முத்தரையரின் மறுப்புக்கு சமாதானமளிக்கிறான் இராஜேந்திரன். ஒருவாறு சமாதானமடைகிறார் முத்தரையர்
.
முத்தரையரே விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது போலப் பட்டதும் வடபுல அமைச்சர் கையை உயர்த்துகிறார். அவர் பக்கம் திரும்பிய இராஜேந்திரன், “சொல்லுங்கள் அமைச்சரே! உங்களது எண்ணத்தையும் அவையாருக்கு அறிவியுங்கள்!” என்கிறான்.

“அரசே! புதிய தலைநகரை எங்கு அமைப்பதாகத் தங்கள் விருப்பம்?” என்று கேள்வியைத் தொடுக்கிறார்.

“அமைச்சரே எமது விருப்பம் இருக்கட்டும், தங்கள் விருப்பம் என்னவோ?”

“காஞ்சி...” என்று இழுக்கிறார்.

கடற்படைத் தண்டநாயகர் கை உயர்கிறது. அவரைப் பேசச் சொல்வது போலக் கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன்.

“அரசே! இப்பொழுது சோழப் பேரரசு ஒரு சிறந்த கடலோடும் அரசாகி வருகிறது. எனவே, கடற்கரையில் புதிய தலைநகரை அமைப்பதே சாலச் சிறந்ததாகும். திருமயிலை ஒரு சிறந்த இடம் என்று இந்தப் பேரவைக்குச் சொல்ல விரும்புகிறேன்.” என்கிறார் அவர்.

பலரும் பலவிதமான இடங்களை அறிவிக்கிறார்கள். இராஜேந்திரனின் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது. யாரும் அவன் மனதில் உள்ளதை அறிவிக்கவில்லை. இறையிரவன் பல்லவராயரும், சிவாச்சாரியனும் வாயைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்பிய இராஜேந்திரன், “பல்லவராயரும், ஓலைநாயகமும் அமைதியாக அமர்ந்திருப்பதின் காரணத்தை இந்த அவைக்குத் தெரிவிக்கலாமே!” என்று புன்னகைக்கிறான்.

“கோப்பரகேசரியாரே! என் மனதில் சோழ நாட்டுக்கு ஒரு புதிய தலைநகர் வேண்டும் என்று தோன்றவில்லை!” என்று பளிச்சென்று அறிவிக்கிறான் சிவாச்சாரி.

“காரணம் என்னவோ?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது
.
“தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றவேண்டும் என்று எனக்குப் படவில்லை. வேறொன்றுமில்லை. மற்றபடி கோப்பரகேசரியாரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் நான்!” இப்பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் மன்னன் விரும்புகிறான் என்று அறிநது அதற்குத் தகுந்தபடி - தங்களுக்குத் தோன்றிய ஒரு ஊரின் பெயரை அறிவித்தார்கள். முத்தரையர்கூட தஞ்சை சோழர்களின் சொந்த ஊர் அல்ல என்றுதான் வருந்தினாரே தவிர இராஜேந்திரன் விருப்பத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, இராஜேந்திரனின் மருமகனாக இருந்தும், அவனது விருப்பத்தை ஆதரிக்காமல் சிவாச்சாரி பேசியது அனைவருக்கும் மலைப்பாகத்தான் இருக்கிறது. இதனால் அவன் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப்படுமோ என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் பெரிதாக எழுந்து நிற்கிறது.

பெரிதாகச் சிரிக்கிறான் இராஜேந்திரன். “கடைசியில் தஞ்சைக்கு ஆதரவாக ஒரு குரல் எழும்பியிருக்கிறது! முத்தரையர் சார்பாக சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சையே இருக்கட்டும் என்று ஓலைநாயகம் அறிவிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோமாக!” என்றபடி இறையிரவரன் பல்லவராயரை நோக்கி, “நீர்தான் பாக்கி இருக்கிறீர். உமது கருத்தைச் சொல்வீராக!” என்று அவரை உற்று நோக்குகிறான்.

“அரசே! அனைவரும் ஒரு ஊரையோ, நகரையோ சோழப் பேரரசின் புதிய தலைநகராக அறிவிக்கும்படி குரல் கொடுத்தார்கள். காஞ்சி பல்லவர்களின் தலைநகரம் - என் சொந்த ஊராக இருந்தாலும்கூட. திருமயிலை சிவனாரின் திருத்தலம். கடலில் சீற்றம் அங்கு அதிகமாகவே உள்ளது. மல்லையின் கீழ்ப் பகுதியைக் கடல் கொண்டதும் நாமறிந்ததே. எனவே பெரிய நகரை மயிலையில் எழுப்புவது பூம்புகாரின் நிலைமை அதற்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொண்டே செய்வதற்கு இணையாகும். கடற்கரையில் துறைமுகங்களைக் கட்ட வேண்டும், தலைநகரை எழுப்பக்கூடாது என்பது எனது கருத்து. எதிரிகளின் கடற்படைத் தாக்குதலிருந்து தவிர்த்துக் கொள்ள அது உதவும்.

“எனவே, உள்நாட்டில் தலைநகர் இருப்பதே சாலச் சிறந்தது. அதுவும், புதிதாக, அடிமட்டத்திலிருந்து அதை எழுப்புவதே முறையாகும். பலவிதமான பாதுகாப்புகளுடனும், இக்காலம் மற்றுமல்லாது எதிர்காலத்திற்கும் சிறப்புடையதாகவும், சோழர் பெருமையை நிலைநிறுத்தும் புகழுடையதாகவும் அதை அமைக்கவேண்டும். ஆகவே அது எங்கு இருக்க வேண்டும் என்பதையும் தாங்களே அறிவிக்கவேண்டும் என்றே இந்தப் பேரவைக்கு நான் முன்மொழிகிறேன்!” என்று அமர்ந்துகொள்கிறார் பல்லவராயர். தனது மன்னனின் விருப்பம் என்ன என்று அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தவராயிற்றே!

“பல்லவராயரே! உம்முடைய, மற்றும் திருமந்திர ஓலைநாயகரின் பதில்களைக் கேட்டால் நீங்கள் இருவரும் எமக்கு அறிவிக்காமல் பதவி மாற்றம் செய்து கொண்டமாதிரி தோன்றுகிறது. அவர் தண்டநாயகர்கள் போலச் சுருக்கமாகத் தன் கருத்தைச் சொன்னார். நீர் ஓலைநாயகரைப் போல் நன்கு விளக்கம் செய்து உமது கருத்தை வலியுறுத்தினீர். உமது விளக்கம் எமக்கு மிகவும் சரியான ஒன்றாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்தையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டோம். அந்த இடத்தையும் அரசு கையாக்கம் செய்ய ஆணையும் அப்பொழுது பிறப்பித்தோம். அந்த இடம் கொள்ளிடத்திற்கு வடபாங்கில் அமைந்திருக்கிறது. அங்கே புதிய தலைநகரை உருவாக்குவோம்.

“நீரும், திருமந்திர ஓலைநாயகமும் சேர்ந்து நகரை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவீர்களாக. இன்னும் மூன்று திங்களில் திட்டம் எம் முன் வர வேண்டும். அத்தலைநகருக்கு இப்பொழுது ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயரை நாம் அளிக்கிறோம். அது மட்டுமல்ல, பெருவுடையாருக்கு அங்கு மற்றுமொறு கற்றளியையும் அமைக்கவிருக்கிறோம் என்று இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது மரபுப் பெருமையை, சோழர்களின் சிறப்பை உலகுக்குப் பறை சாற்றும் வரையில் அது அமைந்திருக்கும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாம் எதிர் நோக்குகிறோம்.” உற்சாகமாகப் பேசிக் கொண்டே செல்கிறான் இராஜேந்திரன்.

அவையே அவன் பேச்சில் கட்டுண்டு போகிறது. அவன் பேசப் பேச சிவாச்சாரியனுக்கு அவனது தொலைநோக்கு நன்கு புரிகிறது. தனது தந்தையைவிடப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறான் இராஜேந்திரன் என்று அவனுக்குப் புலனாகுகிறது. மேலும், தனக்கென்று ஒரு தனிப் புகழையும், வரலாற்றில் தனி இடத்தையும் தேடத் துடிக்கிறான் என்றும் அவன் அறிந்து கொள்கிறான். இராஜராஜரிடம் இருந்த செல்வாக்கு தனக்கு இராஜேந்திரனிடம் இருக்குமா, அல்லது தனது உண்மையான பதிலால் அது குறைந்து போகுமா என்றும் அவனால் அப்பொழுது தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் குருநாதர் கருவூரார், “சிவனே, எப்பொழுதும் தாமரை இலைமீது இருக்கும் நீர்த் துளியைப் போல இருந்து பழகு. அரசர்களுடன் இருப்பது நெருப்புடன் பழகுவது போலத்தான். எதற்கும் உன்னைத் தயார் செய்து கொள். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்” என்று சொன்ன அறிவுரையை நினைவில் நிறுத்துகிறான்.
* * *
                              ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சி
                            நள, சித்திரை 14 - ஏப்ரல் 29, 1016
சுற்றுப் பிரகாரத்தில் நிலவுமொழியும் அவளது தந்தையும் நடந்து கொண்டிருக்கின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் சந்திக்கும்படி சிவாச்சாரியனிடமிருந்து சேதி வந்ததால் அவர்கள் திருமயிலையிலிருந்து இரண்டு நாழிகை முன்னர்தான் வந்து சேர்ந்திருந்தனர். சிவாச்சாரியனைச் சந்திப்பதற்குமுன் ஏகாம்பரநாதரைத் தரிசித்துவிட்டு, பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இருவர் மனதிலும் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் - நிலவுமொழிக்கு இன்று ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.

“எனக்குக் காலை வலிக்கிறதம்மா. களைப்பாகவும் இருக்கிறது. சிறிது நேரம் இந்த மண்டபத்தில் அமர்ந்து கொள்வோம் அமர்ந்து கொள்வோம்.” என்று தந்தை சொன்னதும், நிலவுமொழி அருகிலிருந்த மண்டபத்தை நோக்கி நடக்கிறாள். ஒரு காலைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி மண்டபத்தில் அமர்ந்து தூணில் சாய்ந்து கொள்கிறார் அவளது தந்தை. அவரருகில் அமருகிறாள் நிலவுமொழி. மயிலைக்கு வராமல் காஞ்சிக்குத் தங்களை சிவாச்சாரியார் வரவழைத்ததின் நோக்கம் என்ன என்று அவள் மனது அவளை அரித்துக் கொண்டே இருக்கிறது. அவள் தந்தை அதைப் பற்றிச் சிறிதும் கவலைப் பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. ஏன்,  என்ற கேள்வியே கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அவர்.

“உஸ்” என்று மூச்சைப் பெரிதாக விட்டுக்கொண்டே துணியால் விசிறிக் கொள்கிறார் அவர். சித்திரை பிறந்து பதினான்கு நாள்களே ஆகியிருந்தாலும் வெய்யில் உச்சியைப் பிளக்க ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுது அவளது தந்தைக்கு அடிக்கடி களைப்பு வருகிறது. ஐம்பது வயதுகூட ஆகவில்லை. ஆனாலும் மிகவும் தளர்ந்து போயிருக்கிறார். தனக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் ஏற்பட்ட தளர்வா, அல்லது அவரது குடும்பத்தார் அனைவருக்கும் வரும் இளமுதுமையா என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது குடும்பத்தில் யாருமே ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியதில்லை. அவளது தாய் இருபத்தைந்து வயதிலேயே இறந்து விட்டாளாம். அதிலிருந்து அவளது தந்தைதான் மறுமணம் செய்து கொள்ளாமல் அவளை வளர்த்து வருகிறார். அவளுக்கு முன்னால் பிறந்தவர்கள்கூட ஐந்து வயதைத் தாண்டுமுன்னரே இறைவனடி சேர்ந்து விட்டார்களாம். மூன்று வயது நிறையும் முன்னரே சென்றுவிட்ட தாயின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. ஆகவே, தன் தந்தையின் அவசரம் அவளுக்குப் புரிகிறது. அதை எண்ணிப் பார்த்தால் அவளுக்கு இதயம் கனக்கிறது.

“ஏகாம்பரநாதா, என் தந்தை நிறைய நாள் நோய் நொடியில்லாமல் வாழ அருள் செய் அப்பனே!” என்று மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள். வாயைத் திறந்து, “தந்தையே, சிவாச்சாரியார் நம்மை எங்கு சந்திப்பதாகச் சொன்னார்? எப்பொழுது சந்திப்பதாகச் சொன்னார்? இரண்டு நாழிகை கழிந்தால் கதிரவன் சாய்ந்து விடுவான். இரவை எங்கு கழிப்போம்? நமக்கோ காஞ்சியில் யாரையுமே தெரியாது. நீங்களோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் அமர்ந்திருக்கிறீர்களே?” என்று வினவுகிறாள்.

“அப்பாடி, என்ன வெய்யில், என்ன வெய்யில்?” என்று அலுத்துக் கொண்ட அவளது தந்தை, “நிலா, ஏனம்மா நீ உன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? சிவாச்சாரியருக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தின் திருமந்திர ஓலைநாயகமான அவர் நம்மை இரவில் தனியாகத் தவிக்க விட்டுவிடுவாரா? தகுந்த காரணம் இல்லாமலா நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்? அவருடன் பழையாறையில் இருந்திருக்கிறாயே! அவரைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள இயலவில்லையா? அவருக்கு முக்கியமான பணிகள் ஆயிரம் இருக்கும். அதில்தானே அவர் முதலில் கவனம் செலுத்துவார். நாம் அதற்குப் பின்னர்தானே? எனவே வருவதில் தாமதம் ஏற்பட்டால் அதைப் பெரிது படுத்தாமல் காத்திருப்பதுதான் நமக்கு நல்லது.” என்று பதில் சொல்கிறார். அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சலாக வருகிறது.

சிறிது நேரம் சென்று தன் மனதில் தோன்றுவதை சொல்லலாம் என்று திரும்பினால், அவளது தந்தை கண்களை மூடிக் கொண்டு தூணில் சாய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்த்தால் அவளுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவரது நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று தானும் எதிரில் இருக்கும் தூணில் சாய்ந்து கொள்கிறாள். களைப்பில் அவளது கண்களும் மூடிக் கொள்கின்றன.

ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?” என்று கனிவான குரலில் வினவுகிறார். வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரோ இவர்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது நிலவுமொழிக்கு. சட்டென்று எழுந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்கிறாள் அவள்.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கி விட்டோம். நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பி இருக்கலாமே!” மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.

“அதனாலென்ன அம்மா. நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!” என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார் அவர்.

இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண்விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காலில் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார். “ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி.” என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. “தெரியும். தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள் போல இருக்கிறது. உங்களை அழைத்துச் சென்று வசதியாகத் தங்க வைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள். நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே உண்டுவிட்டு, அருகிலிருக்கும் வீட்டிலேயே இரவு தங்கிக் கொள்ளுங்கள். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப் பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான்.” என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின் தொடர்கிறார்கள்.[வளரும்]

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது..?

//சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.//

நாகூருக்கு ஏன் “நாகூர்” என்று பெயர் வந்தது? Miliion Dollar Question என்பார்களே அது இங்கு முற்றிலும் பொருந்தும். பெயர்க்காரணம் குறித்து வரலாற்றாசிரியர்கள் அவரவர்கள் தங்கள் ஆய்வுக்கேற்ப ஏராளமான கருத்துக்களை பதிந்துள்ளனர்.
நாவல்மரம் நிறைந்திருந்த நாவல் காடு
நாகர்களும் வசித்ததாக குறிப்பிடும் ஏடு
நாவலர்கள் வாழ்ந்ததினால் நா-கூர் என்று
நற்றமிழில் பெயர்வைத்தார் நல்லோர் அன்று
என்று நாகூரின் பெயர்க்காரணத்தை நானெழுதிய “அந்த நாள் ஞாபகம்” என்ற நூலில் கவிதை வரிகளில் வடித்திருந்தேன். “நாகூர்” என்ற பெயர் எதனால் வந்திருக்கக் கூடும் என்று ஆழ்ந்து ஆராயுகையில் பல்வேறு சுவாராசியமான தகவல்கள் நமக்கு அரிய பொக்கிஷமாக கிடைக்கின்றன.
தமிழக சுற்றுலா வரைபடத்தில் நாகூர் ஒரு புனித யாத்திரை ஸ்தலம் என்ற வகையில்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றதே அன்றி அதன் தொன்மையான வரலாறு, சங்ககால பெருமை இவற்றினை எடுத்துரைப்பார் எவருமில்லை.
சமயத்தால், வணிகத்தால், தமிழால், வளத்தால் புகழ்பெற்ற ஊர் இது. புகழ்பெற்ற ஆதிமந்தி, ஆட்டனத்தி கதை நிகழ்ந்த ஊர் இது. காவிரிப் பூம்பட்டினம் பேரலையால் சூழப்பட்டு கடலுக்கு இரையானபின், நாகூர் கடல் வாணிகத்தின் நுழைவாயிலாகத் திகழ்ந்ததற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. உரோமானியர், சீனநாட்டார், பர்மியர், சுமத்திரர், அரபியர் என பலநாட்டாரும் கடல் வாணிபம் மேற்கொண்ட தொன்மையான ஊர் இது.
இவ்வூரை நாகரிகத்தின் தொட்டில் என்றாலும் மிகையாகாது. நாகூரின் எல்லையில் ‘பார்ப்பனச் சேரி’ உள்ளது. இது சங்க காலத்திலேயே அங்கு பெருகியோடிய ஆற்றின் அக்கரையில் வந்திறங்கியோர் சேரி அமைத்து தங்கிய இடமாகும். அக்கரையகரங்கள்தான் பின்னர் அக்ரகாரம் என்று மருவின.
“பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்”
என்று மாராத்திய மன்னன் பிரதாபசிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.
சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.
நாகூர் என்ற பெயர் எதனால் வந்தது? நாவல் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இவ்வூர் ஒருகாலத்தில் ‘நாவல் காடு’ என்று அழைக்கப்பட்டது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் அவ்வளவாக தென்படவில்லை.
முன்னொரு காலத்தில் நாகப்பாம்பு நிறைந்திருந்த காடு இது. அதனால்தான் நாகூர் (நாக+ஊர்) என்று அழைக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள் வேறு சிலர். நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திரம் கூறுகிறது. “மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் இங்கு வசித்து வந்தாதால் நாகூர் என்ற பெயர் வந்தது என்ற வாதமும் நமக்கு அவ்வளவாக திருப்தியைத் தரவில்லை.
கூர்மையான நா படைத்தவர்கள் வாழும் ஊர் நா+கூர் என்பது சிலரின் வாதம். அதாவது அறம் பாடத்தக்க புலவர் பெருமக்கள் இங்கு வாழ்ந்ததினால் இப்பெயர் வந்ததாம். பழங்காலந்தொட்டே இசைவாணர்களும் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களும் இங்கு வாழ்ந்ததினால் நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. “நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழ வேண்டும்” என்ற சொல்வழக்கு வெறும் வேடிக்கைக்காக சொல்லப்படுவதன்று.
பதினெட்டாம் நூற்றாண்டில் மட்டும் புகழ்ப்பெற்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் நாகூரில் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சென்ற நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்
“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”
என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே முழுவதுமாக அழிந்து சின்னா பின்னமாகி விட்டதாக முன்னோர்கள் கூற நான் கேட்டதுண்டு.
நாகூருக்கு மிகமிக அருகாமையில் இருக்கும் ஊர் திருமலைராயன் பட்டினம். விஜயநகர வேந்தர்களின் ஆட்சி காலத்தில் சிற்றரசன் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். காளமேகப் புலவன் சினமுற்று பாடிய அறத்தால் அவனது ஆட்சியே சரிந்து அவலத்திற்கு உள்ளானது என்பர்.
“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்றுவெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்” என்று பாடிவிட்டுச் சென்றான் காளமேகம்.
அதாவது, கொலைகாரர்கள் வாழும் ஊர். கோள், மூட்டல், வஞ்சகம் செய்தல் முதலியன கற்றிருக்கும் ஊர். காளைமாடுகளைப்போல் கதறித் திரிவோர் நிறைந்த ஊர். நாளைமுதல் மழைபொய்த்து வறண்டு போய் மண்மாரி பெய்யட்டும் என்று அறம் பாடியதால் அந்த ஊரே செழிப்பற்று போனது என்பார்கள்.
புலவர்கள் பாடும் அறப்பாட்டுக்கு பலிக்கக் கூடிய வலிமை உண்மையிலேயே உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அது நமக்கு இப்போது தேவையில்லாதது.
அந்நாளில் நாகூரை வடநாகை என்றே பலரும் அழைத்து வந்தனர்.
“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தறம் நன்கு புலப்படும்.
பாக்கு கொட்டைகள் வைத்து ‘கோலி’ விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த பாலகர்களிடம் பசியினால் வாடிய காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் ‘தொண்டையில் விக்கும்’ என்று பதில் கூறினார்கள். [விற்கும் என்பதை பேச்சுவழக்கில் இன்றளவும் “விக்கும்” என்று கூறக் கேட்கலாம்] உடனே புலவர் வெகுண்டு அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு“ என்பது வரை சுவற்றில் எழுதி விட்டு, பசியாறிய பிறகு எஞ்சிய பகுதியைப் எழுதி முடிப்பதற்கு அங்கு வந்தபோது அவர் வியப்புற்று போனார். காரணம்
“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை“ – என்று பாலகர்கள் தங்கள் தமிழாற்றலை வெளிக்காட்டியிருந்தார்கள்.
நாகூர் பகுதி மக்களின் நாவன்மையும், நவரசப் பேச்சும், நையாண்டிச் சாடலும், நகைச்சுவை உணர்வும் நானிலமும் அறிந்த ஒன்று.
நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்று போற்றப்படும் மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரின் பெயர்க்காரணத்திற்கு கூறும் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.
“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வெஒண்மர முதன்மைமிக் கிருத்தலி னிவ்வூர்
நாக வூரெனுந் தலைமைபற் றியபெயர் நண்ணி
யாக மற்றுநா கூரென மரீஇயதை யன்றே
- (செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)
நாகூருக்கு கல்லெறி தொலைவில் இருக்கும் மேலநாகூரில்தான் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்தன. இப்பொழுது குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் வெறும் புன்னை மரங்கள்தான் பெருகி அடர்ந்திருந்ததாம்.
மற்ற எந்த மரங்களுக்கும் இல்லாத அளவுக்கு புன்னை மரங்களுக்கு தமிழ் இலக்கியங்களில் ஒரு தனி இடம் உண்டு.
“உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை” என்ற நற்றிணை (231) பாடலில் புன்னைமரத்தைப் பற்றிய வருணனையை நாம் காணலாம்.
“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” என்ற திருஞான சம்பந்தரின் பாடலில் புன்னை மரத்தின் பூவானது சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாக வருணனை செய்கிறார்.
நாக மரம் என்பது புன்னை மர இனங்களில் ஒன்றாகும். நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்ற பாரிவள்ளலைப் பற்றி நாம் இலக்கியத்தில் படித்திருப்போம்.
“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி” என்ற சிறுபாணாற்றுப்படை (88-91) பாடல் வரிகள் இச்சம்பவத்தை எடுத்துரைக்கிறது.
புன்னை மரங்கள் காட்சிக்கு மிக எழிலான தோற்றத்துடன் காணப்படும். இம்மரங்கள் ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியன. புன்னை மரத்தின் இலை, மொட்டு, பூ இம்மூன்றுமே காட்சிக்கு மிக அழகாக இருக்கும்.
தென்பகுதியான இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா இவை அனைத்தும் தரைமார்க்கமாக இணைந்து லெமூரியா கண்டம்/ குமரிக் கண்டம் என்று அழைக்கப்பட்டதாய் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஆதாராமாக இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் மண்புழுக்களும், புன்னை மரங்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவை என்பது அவர்கள் எடுத்து வைக்கக்கூடிய ஆதாரங்களில் ஒன்று. நாகூர் போன்ற தென்னிந்தியக் கடற்கரையோரம் காணப்பட்ட புன்னை மரங்கள்தான் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அடர்ந்திருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் நாகர் இன மக்களின் இங்கு வாழ்ந்ததினாலேயே நாகர்+ஊர் = நாகூர் என்றானது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர்கள் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்கி வைக்கிறார்கள்.
நாகர்கள் என்றால் யார்? இதனை முதலில் தெரிந்துக் கொள்வது அவசியம். நாகர்கள் யார் என்பதிலேயே எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் வரலாற்றாசிரியர்களுக்கு இடையே நிலவுகின்றன.
நாகர் என்னும் சொல் வடமொழியிலும் உண்டு. தமிழிலும் உண்டு. சூழ்நிலைக்கேற்ப சொற்களின் பொருள் மாறுபடும். வடமொழியில் பாம்பு, ஒலி, கருங்குரங்கு, யானை, வானம். வீடு பேற்று உலகம், மேகம் என பொருள்களைத் தரும். தமிழ் மொழியில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.
நாகர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அ|ஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர் என்று சிலரும் நாகர்கள் தமிழகத்து பழங்குடியினர் என்று சிலரும் பகர்கின்றனர். நாகநாட்டவர் தமிழ்நாட்டுக் கடற்கரையூர்களான நாகூர், நாகப்பட்டினம் (நாகர்+பட்டினம்), நாகர்கோவில் வழியே தமிழகத்தில் வந்து குடியமர்ந்தனர் என்கின்றனர் வேறு சிலர்.
ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றும், நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்றும் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள் என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.
முரஞ்சியூர் முடிநாகராயர், முப்பேர் நாகனார், மருதன் இளநாகனார்,தீன்மிதி நாகனார், வெண்நாகனார், அம்மெய்யன் நாகனார், வெண்நாகனார், நாகன் மகன் போத்தனார், எழூஉப்பன்றி நாகன் குமரனார், நாலக் கிழவன் நாகன் என்றெல்லாம் புலவர், புரவலர் பெயர்களை தமிழிலக்கியத்தில் நாம் காண முடிகின்றது.
சங்க காலத் தமிழகத்தில் நாகர், இயக்கர், திரையர், கந்தருவர் என்னும் இனத்தவர் பெருமளவில் வாழ்ந்தனர் என்றும், இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே என்றும் அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.
நாகர் புத்த மதத் தொடர்புடன் நுழைந்தனர். ‘புத்தரும், மகாவீரரும் நாக இனப் பெரியோர்களே’ என்று சாதிக்கிறார் கா.அப்பாத்துரை. தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால்தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபைச் சார்ந்தது என்றும், புத்தநெறி வங்கத்திலும், தென்னாடு, இலங்கை, பர்மா, சீனா முதலிய இடங்களில் பரவியதற்கு நாகூர் போன்ற இடங்களில் வசித்த நாகமரபினரே காரணம் என்றும் இவர் வாதிடுகிறார்.
புத்த துறவிகளின் நடமாட்டமும், புத்த விகாரமும் இப்பகுதியில் காணப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சீனப் பயணி யுவான் சுவாங் (கி.பி.629-645) தன் பயணக் குறிப்பேட்டில் அசோகச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட புத்தவிகாரத்தை நாகையில் கண்டதாக எழுதி வைத்துள்ளார். கி.மு. 302-ஆண்டுக்கு முன் வந்த சிரியா நாட்டு மெகசுதனிசு முதல் எகிப்து தாலமி, சீன நாட்டுப் பாகியான், இத்-சிங் முதலியோர் இப்பகுதியை பற்றிய மிகச் சுவையான தகவல்களைத் தந்து உதவியுள்ளனர்.
“சுந்தர பாண்டியன் என்னும் தமிழ் மன்னன் நாகர் குலப் பெண்ணை மணந்தான். அதனால் இவன் சுந்தரநாகன் – சுந்தர பாண்டியநாகன் எனப்பெற்றான்” என்று மார்க்கோ போலோ தம் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
நாகரிகத்திலும், பண்பிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கியவர்கள் நாகர்கள் என்றால் அது மிகையல்ல. “நாகரிகம்” என்ற சொல்லே “நாகர்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பர். நாகர்கள் வகுத்த எழுத்து முறையே தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒருபுறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவியை கண்டுபிடித்தவர்களும் நாகர்கள்தான். [நாகூர் ‘நகரா மேடை’யில் முழங்கப்படும் அதே நகராவைத்தான் இது குறிக்கிறது]
நாகசுரம் (நாதஸ்வரம்) என்ற வாத்தியக்கருவி நாகூர் நாகை போன்ற இடங்களில் வாழ்ந்த நாகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாகசுரம், தவில் போன்ற இசைக்கருவிகள் ஆரியப் பிராமணர்களுக்கே உரித்தான கலைகள் அல்லவா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நீங்கள் முணுமுணுப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது.
ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று விதிவிலக்கு பண்டுதொட்டு இருந்து வருகிறதென்ற உண்மை பெரும்பான்மையான பிராமணர்களே அறிந்திராத உண்மை. மனுதர்ம சாத்திரம் 4-ஆம் அத்தியாயம், 15-ஆம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது…. இதுபோன்ற சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது..
வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறிய காரணத்தால் பார்ப்பனர் சிலர் ஊராரால் விலக்கப்பட்டு ஊர் எல்லைக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தியினை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
சங்க காலத்தில் இசைப்பயிற்சியில் கைத்தேர்ந்தவர்களாக இருந்த பாணர், நாகர் குலத்தினரே என்கிறார் மற்றொரு ஆய்வாளர். எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்று இலக்கியத்தில் நாம் காணும் பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவுகிறது. சீவக சிந்தாமணியில் இடம்பெறும் “பாணியாழ்”, “பாண்வலை”, “பாணுவண்டு” என்ற சொற்களை ஆராய்ந்தால் பாண் என்னும் சொல், பாட்டு என்னும் பொருளிலேயே கையாளாப்பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் “பாண்-பாட்டு” என்ற சொல்லைக் காண முடிகின்றது.
நாகூருக்கும் முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழுக்கும் சங்க காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு. நுண்கலை வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் “இசை நுணுக்கம்” என்ற நூலைப்படைத்து நான்காம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.
நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. (இவர் கே.பி.சுந்தரம்பாளின் கணவர்) இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர், ஆம். செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம்தான் இசை பயில அனுப்பி வைத்தார். அதனால்தான் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் எழுகிறது.
இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் வாழ்ந்த ஊர் நாகூர். உஸ்தாத் சோட்டு மியான், உஸ்தாத் நன்னு மியான்,உஸ்தாத் கவுசு மியான், உஸ்தாத் தாவூத் மியான் என்று எண்ணிலா இசைவாணர்களின் பெயர்களை எழுதிக் கொண்டே போகலாம்.
உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் . கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவரான நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். இசைமணி எம்.எம்.யூசுப், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா போன்ற எத்தனையோ இசை வல்லுனர்களை பெற்றெடுத்த ஊர் நாகூர்.
நாகூரின் பெயர்க்காரணம் எதுவாக இருப்பினும் முத்தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், கடல் வாணிபத்திற்கும் தொன்மையான இவ்வூரின் பங்களிப்பு அளவிட முடியாதது. கடல் கடந்து இவ்வூரின் பெயரில் சங்கம் வைத்து செயல்படும் அன்பர்கள் மார்தட்டி கொண்டாடும் அளவுக்கு அளவிடற்கரிய பெருமைகள் உள்ளன.
இங்குள்ள மக்களுக்கு வஞ்சக குணங்கள் இருப்பதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தூய்மையான நெறியில் செல்லும் அவர்கள் அச்சமற்ற தன்மை கொண்டவர்கள். நம் பெருமான் உறையும் நாகூரில் வாழும் இவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். பாவங்கள் புரிவதில்லை.
இதை நான் சொல்லவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூர் புராணம் என்ற தன் நூலில் (நகரப்படலம்:4) குறிப்பிடுகிறார்.
“பஞ்ச மற்றது படர்ப்பிணி யறது பவஞ்செய்
வஞ்ச மற்றது வறுமைமற் றற்றது, வாழ்க்கை
யஞ்ச மற்றது தீவினை யற்ரதன் றாகா
நஞ்ச மற்றது நம்பெரு மானுறை நாகூர்”