வியாழன், 6 பிப்ரவரி, 2014

முட்டாள்களின் கையில் ஆட்சியும் அதிகாரமும்..!

முட்டாள்களின் கையில் ஆட்சியும் அதிகாரமும்..!

நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஜனார்த்தன் திரிவேதி தெரிவித்த ஒரு கருத்து "ஜாதிரீதியாக இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்பது, இதில் என்ன தவறு இருக்கிறது ? அவர் கேட்பதில் இருக்கும் நியாயத்தை ஏன் யாரும் உணர மறுக்கின்றனர் ? இந்த காரணங்களுக்காக இன்றைய தினம் நாடாளுமன்றத்தை அனைத்துக்கட்சிகளும் முடக்குவதும், அதற்க்கு பதிலளித்த சோனியாகாந்தி ஜாதிரீதியான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும், அந்த பேச்சுக்கே இடமில்லை என்றும் சொல்லியுள்ளார், இந்த விசயத்தில் அனைத்துக்கட்சிகளும் மக்களை ஏமாற்றவே நினைக்கிறது, ஜாதிரீதியான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யக்கூட தயங்குவதும், அதில் சிறு திருத்ததைக்கூட செய்ய விரும்பாததும் ஓட்டு அரசியலுக்காகதானே தவிர வேறு ஒன்றும் இல்லை..,

இதில் வேடிக்கையே ஜாதிரீதியான இடஒதுக்கீடு வழங்கும் இதே அரசுதான் ஜாதியை கைவிடவேண்டும் என்கிறது, ஜாதிரீதியான கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது ?

மக்களே சிந்தியுங்கள்... இடஒதுக்கீட்டில் நியாயங்கள் மறுக்கப்படுகின்றன, யார் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்தார்களோ அவர்களே தொடர்ந்து அனுபவிக்கப்போகிறார்கள், எந்த ஜாதி எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறது என்ற கணக்கே இல்லாமல், ஜாதிகளுக்கு சதவீத அடிப்படையில் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும் ? என்ற மிகமிக அடிப்படையான கேள்வி எந்த ஒரு முட்டாளுக்கும் தோன்றும், ஆனால் இங்கு ஆட்சியில் இருக்கும், அதிகாரத்திற்க்கு வரதுடிக்கும் முட்டாள்களுக்கு ஏன் தோன்றவில்லை ...? இவர்களுக்கு எல்லாமே தெரியும்.... ஆனால் நாம் எதிர்பார்க்கும் எந்த நியாயமும் இவர்கள் தர தயாரில்லை காரணம் இதுதான் இவர்களின் அமுதசுரபி, இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக காட்டிதான் இவர்கள் அரசியலே நடந்துகொண்டு இருக்கிறது.

இதில் ஒரு வெளிப்படையான விவாதமும், முடிவும் எட்டப்படாதவரை இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியாது, ஜாதிய வேறுபாடுகளை களைய முடியாது, வல்லரசாவது வெறும்கனவாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த இடஒதுக்கீட்டால் எந்த பலனையும் இதுவரை பெறாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களேக்கூட எதற்க்காக ஆதரிக்கிறோம் என்று தெரியாமல் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதுதான் வேதனை

நாடாளுமன்றம் எனும் கிரிமினல்கள் கூடும் இடத்தில் நியாயங்கள் கிடைக்காதுதான்...

## முட்டாள்களே திருந்துங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக