திங்கள், 10 மார்ச், 2014

4 தொகுதிகளில் போட்டியிட எழுச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் முடிவு

எழுச்சி தமிழர் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு வரும் மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

எழுச்சி தமிழர் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு வரும் மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு முத்தரையர் பேரவை மற்றும் எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் நாகமலை மாநில பொதுச் செயலர் ரகு ஆகியோர் பேசினர். 

தொடர்ந்து மாவட்டச் செயலராக நவநீதன், வழக்குரைஞர்  அணி செயலராக கொத்தக்கோட்டை சுப்பிரமணியன் , அரிமழம் ஒன்றி யசெயலாளராக சன்னாசி, திருவரங்குளம் ஒன்றியச் செயலராக வடகாடு ஜெயசீலன் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். 

கூட்டத்தில் மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக