திங்கள், 10 மார்ச், 2014

முத்தரையர் கூட்டமைப்பு சார்பில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு



மதுரை,
     தமிழக முத்தரையர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. வக்கீல் பாண்டிப்பெருமாள் தலைமை தாங்கினார். வக்கீல் பெரியகருப்பன், கண்ணன், முத்துச்சாமி, குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–

     தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் தொகையுடன் உள்ள முத்தரையர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் போதிய வாய்ப்பு வழங்கவில்லை. எங்கள் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் தவிர அனைத்து தொகுதிகளிலும் கூட்டமைப்பு சார்பில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் வக்கீல் ஆண்டிச்சாமி, தேனியில் உசிலம்பட்டியை சேர்ந்த மெய்யன், திண்டுக்கல் தொகுதிக்கு நத்தம் சேர்வீடு அழகு, விருநகருக்கு திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பால்பாண்டி, ராமநாதபுரம் தொகுதியில் வைரவன்கோவில் கோவிந்தன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 2–வது கட்ட வேட்பாளர் பட்டியில் விரைவில் வெளியிடப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : DINATHANTHI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக